பெருமை

Vinkmag ad
பெரிதினும் பெரிதாய்ப் பெருமிதம் கொள்வாய்
அரிதினும் அரிதாய் அவனியில் வந்தாய்
 
வாய்ப்புகள் உனக்கு வழங்கியோன் யார்தான்
வாய்களால் அவனை வழுத்தியே போற்று
பெருமையும் புகழும் பெரியவன் பெற்றான்
பெருமிதம் மிளிரப் பெரிதெனப் போற்று
பெறுதலில் மிகவும் பெருமிதம் கொள்ள
மறுதலித் திடாத மறுமொழி நன்றி
உடலுடன் உளமும் உணர்வுகள் எல்லாம்
திடமுடன் நமக்குத் திகழவே தந்தான்
புலன்களும் அறிவும் பேறுக ளாக
நலமுடன் வழங்கும் நாயனைப் போற்று
 
தமிழையும் நமக்குத் தாயின் வழியாய்
அமிழ்தெனப் பெறுதல் அனைத்திலும் பெருமிதம்
கவிஞனாய்ப் பிறந்ததில் கர்வமும் பெருமிதம்
புவியினில் பெறுவதும் புகழெனும் பெருமிதம்



News

Read Previous

வேலைக்கு சென்ற முதியவர் மாயம்

Read Next

முதுகுளத்தூர் பகுதியில் வீடுகள் சேதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *