பாபர் மஸ்ஜித்

Vinkmag ad

பாபர்மஸ்ஜித்

 

அந்த நாள்?

இந்திய மக்கள்
இன்பத்துடன் வாழ்ந்த நாள்,
இறையான்மையுடன் வாழ்ந்த நாள்,
வேற்றுமையில் ஒற்றுமையாய்
வாழ்ந்த நாள்,
இவை அனைத்தும்
அழிக்கப்பட்டு விட்டது.

நானூறு வருடங்களுக்கு மேல்
நாங்கள் “கடவுளை”
வணங்கி கொண்டு இருந்தோம்
ஆனால் நான்கு நிமிடத்தில்
“கல்லை” வைத்து கடவுள் என்றார்கள்.

நாங்கள் கல்லை கடவுள் அல்ல
என்று வாதிட்டோம்
கல்லை வைத்த அவர்கள்
கடவுள் இங்கு பிறந்ததாய்
கூறி வாதிட்டார்கள்.

வாதம் தொடர்ந்தது
வாதம் வாயிதாவாக தொடர்ந்தது
வாயிதா ஒரு தீர்ப்பானது
எங்களுக்கோ வியப்பானது

நீதிக்காக நீதிமன்றத்தை நாடினோம்
பல்லாண்டு காலமாய்
நீதியை தேடினோம்

தேடிய இடமெல்லாம் எங்களுக்கோ
இதுவரை கிடைத்தது அ”நீதி”

பசி எடுத்தவருக்கு எல்லாம்
பிரித்து கொடுக்க இது
“உணவு” அல்ல.

மாறாக,
பல வருடமாய் எங்கள்
மனதில் இருந்த “உணர்வு”

புகை படத்தில் பார்த்தல் கூட
புகை மூட்டமாய் தெரிகிறது.

எங்கள் கண்ணீர் எல்லாம்
கானல் நீராய் போகிறது

ஏனோ தெரியவில்லை
நேரில் காணவில்லை என்றாலும்

நெஞ்சம் இன்றும் நினைகிறது
எங்கள் இதயம் வலிக்கிறது

அதன் உண்மை தோற்றம்
எங்கள் மனதில் தெரிகிறது

என்றாவது அதனை மீண்டும்
போர்போமா என்று ஏங்குகிறது.
ஏக்கத்துடன் இன்றும் நாங்கள்….

இப்படிக்கு: அஸாருதீன்.K

கைபேசி: 8148406047

 

 

 

 

News

Read Previous

சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல்

Read Next

பழமை நினைவுகளை

Leave a Reply

Your email address will not be published.