படிப்பில் வேண்டும் பிடிப்பு

Vinkmag ad

மூச்சு விடுதல் மட்டு மன்று

*****முயற்சி கூட மனிதமே

பேச்சில் கூறு மனைத்தும் விடாமல்

*****பேணிக் காத்தல் மனிதமே

பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று

*****பயிரும் வளர்தல் போலவும்

காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும்

*****கடின வுழைப்பு வெல்லுமே

ஊதும் சங்கின் அறிவிப் பால்நம்

******உறக்கம் களையச் செய்யுமே

ஓதும் உன்றன் படிப்பால் செல்வம்

******ஓங்கி வளரச் செய்யுமே

தீதும் நன்றும் பகுத்து முடிவைத்

******தீர்க்க வுதவும் கல்வியே

போது மென்ற நிறுத்தல் குறியைப்

******போட்டு விடாது கல்வியே

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

முகவரி

KALAM SHAICK ABDUL KADER

ACCOUNTANT

GRANITE CONSTRUCTION COMPANY

ABU DHABI. U.A.E

MOBILE # 0508351499

News

Read Previous

தமிழ் கற்க உதவும் இணையத்தளம்

Read Next

பி.அசரப் அலி மற்றும் முகம்மது இப்ராகிம் ( மன்னர் ) இல்ல மணவிழா

Leave a Reply

Your email address will not be published.