பக்ரீத் வாழ்த்துக்கள்

Vinkmag ad

பக்ரீத் வாழ்த்துக்கள் 

அஸ் ஸலாமு அலைக்கும் .

இறைவன் ஆணையால்

இப்ராஹிம்  தன்  மகனை 

இறைபலி கொடுத்த நாளாம் .

இப்படித்தானே பக்ரீத் என்னும் 

தியாகத் திருநாள்  வந்ததுவாம்

வரியோர் பசிதீர்த்து மகிழ்ந்திடவே    

வாய்ப்பாய்  அமைந்த திருநாளில் 

குர் ஆன் ஓதி தொழுகை செய்து 

சுயநலம் தன்னைத் தியாகம் செய்து 

இதயம் கனிந்து ஈகை புரிந்து 

இறைவன் ஆணையை நிறைவேற்றி 

மறுமை நாளில் இறைவன்முன்னே 

மனமகிழ்வுடனே நின்றிடுவோம்

கருணை நிறைந்த அல்லா அருளால் 

சுவனம் தன்னில் நிலைபெறுவோம்

பக்ரீத் வாழ்த்துக்களுடன் 

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

1.08.2020

 

  

News

Read Previous

தண்ணீர் நெருக்கடிக்கு தீர்வு உண்டு

Read Next

நடந்தாய் வாழி காவேரி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *