நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
 
(பக்கம் 116-118)
 
 
புல்லின் நுனியில் தானே
தானியங்கள் …
அகதிமுகாம்
அமைத்திருக்கின்றன
என்று புகலாமல்
மண்ணில் மறைந்திருக்கும்
மழைக்கால விதையைக் கூட
மனத்தால் அறிகின்ற
மறை நூல் அறிஞர் இவர் !
இறுதித் தூதர்
வருவார் என்ற
இன்பச் செய்தியை
எண்ணி இருந்தார் !
ஆற்றுப் படுகை வெடிப்பிற்குள்ளே
ஆர்ப்பரிக்கின்ற நதியினைக் கண்டார்
அற்புத மனிதர்.
முகம்மது பெற்ற முன்னுரை !
முதிர்ந்த பெரியவர்
முகம்மது அவர்களைக்
கூர்ந்து நோக்கினார்
குறிப்பினை அறிந்தார் !
வெளிச்சம் எல்லாம்
வில்லையாய் இறுகினால்
எப்படி இருக்கும் ; அப்படி இருந்த
முகம்மது முகத்தை
உற்றுப்பார்த்தார் …
சீதளப்   புன்னகை
செய்தி வாசிக்கிற …
சித்திர உதட்டில்
தம்மை இழந்தார் !
“இவர் –
மேற்கில் உதித்த
மேன்மைச் சூரியன்
அரபு மண்ணிலிருந்து …
சிலை வணக்கத்தை
அறவே ஒழிக்கும்
ஈசா நபிகள் எடுத்துச் சொன்ன
இறுதித் தூதர் இவரே என்பேன்.
சூதர் சூழ்ச்சி நெருப்பு வளையம்.
மேன்மை மிக்க
மெழுகுவர்த்தியை
காப்பதும் கடனே!”
பகர்ந்தார் பஹீரா !
வளர்ப்புத் தந்தை
விரைந்தே முடித்தார்
வாணிபம் எல்லாம்.
விசாவே இன்றி
வெளி நாட்டிற்கு விரைகிற
மனதைப் போல
மக்கமா நகரம்
விரைந்தே வந்தார்.
கண்ணின் மணியாய்க் காத்தார் அதுவரை
அன்றிலிருந்து …
அறுபது வயதில் முதன்முதலாக
முகிழ்த்த கருவை அடைகாத்திருக்கும்
அன்னப்பெண் போல் …
பெரிதும் போற்றினார்
பிள்ளை முகம்மதை !

News

Read Previous

தமிழை வணங்குகிறேன்

Read Next

கலைஞருக்கு வாழ்த்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *