நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
 
(பக்கம் 141 – 143)
 
 
கதீஜாவின் களிப்பு
கதீஜாவின்
மனமாடத்திலிருந்து
ஆயிரம் புறாக்கள்
அன்றே பறந்தன !
ஆனந்த பைரவி
பாடித் திரிந்தன !
கோடைகால
குளிர்மழை அடித்தால்
பூமகள் புரண்டே படுப்பாள் ;
புல்லரிப்போடும் கனவுகளோடும்
புனிதவதியோ
நாட்களை நகர்த்தினார் !
குறித்த நாளில்
திருமணம் நிகழ்ந்தது.
இலக்கணத்தோடு
இயைந்த கவிதையாய்
இருவரும் அன்று
மரபுப் பாத்தியில்
மத்தளம் கொட்டினர் !
சந்தம் இணைந்த
சங்கதி போல
திருமண வாழ்வு
தித்திப்பானது !
தேடிச்சேர்த்த
தேட்டை எல்லாம்
கதீஜா அம்மா
நாயகத்திடத்தில்
நகர்த்தி மகிழ்ந்தார் !
அள்ளி வழங்கலும்,
கிள்ளித் தருதலும்
நாயகம் பொறுப்பு !
அவர்தம் கிளைகளை
கதீஜா அம்மையார்
வேராய் இருந்து
தாங்கிச் சிறந்தார் !
ஊருக்கெல்லாம்
அவர்தம் வாழ்க்கை
குன்றில் எரிந்திடும்
கோடி தீபமாய் …
கண்களில் வெளிச்சமாய் …
மாலை நிழலாய் …
மகிழ்ச்சிக் கவிதையாய் …
ஈர நதியாய் …
நதியின் சுழிப்பாய் …
வசியச் சுரங்கமாய் …
விரிந்து சிறந்தது !
நாற்பது வயது
ஆன கதீஜா
நாயகத்தை விட
மூத்தவர் எனினும் …
இளைய நிலவாய்
அழகு ததும்பினார்;
முதிய நதியாய்
அலைகள் மீட்டினார் !
 

News

Read Previous

திறந்த மனதுடன் இருப்பது அறிவியலின் அடிப்படை

Read Next

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை…

Leave a Reply

Your email address will not be published.