நாளை என்பதே நமக்கு உறுதியில்லை…

Vinkmag ad

₹ ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்!!….

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை…
நாளும் அது புரிவதில்லை!!

₹ பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்…
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!

₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் …

₹ நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….

₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….

₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் …
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை!..

₹ இனி எதற்கும் “ஏன்” என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ….
அதற்கும் … “ஏன்” என்று தான் கேட்பாள் இந்த பெண் .

₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே …
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

₹ சில பிள்ளைகளுக்கு, 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில்தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது …
15 ஆண்டுகள் தன் (பிள்ளைகளுடைய) வருமானத்தில் (பெற்றோர்) வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

₹ கெட்ட (உள்) நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

₹ வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

₹ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்… அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…

₹ மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்!…
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் …

₹ எத்தனை காலம் கடந்தால் என்ன…. சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை…..

₹ இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ….ஏனெனில் ..
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் …

₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

₹ சிரித்துக் கொண்டே உன்னோடிருந்து,
உன்னைச் சீரழிக்கும் துரோகியை விட …
முறைத்துக் கொண்டே, உன் முன்னிருக்கும்
எதிரி மேலானவன்!!…..

₹ அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை….
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது!

₹ உனக்காக… தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்,
ஒருபோதும் இழந்து விடாதே..

₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை…

₹பேரின்பம் வேண்டாம்…
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க………

₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட, நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது……

£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

£ புன்னகை பிரச்சினைகள் “வருவதை தள்ளி போடும்..!!
மெளனம் “பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா “பிரச்சினைகளுக்கும் இந்த வாய்தான் காரணம்..!!!

£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது…..

£ வாழ்வோடு போராடிச் சாவதிலும்,
சாவோடு போராடி வாழ்வதிலுமே…
வாழ்க்கை முடிந்துவிடுகிறது…!!

News

Read Previous

நாயகம் எங்கள் தாயகம்

Read Next

கவி கா. மு. ஷெரீப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *