நம்பிக்கைச் சிறகுகள்

Vinkmag ad

நம்பிக்கைச்சிறகுகள்

களைப்பாற நிழல்தேடி
கானகம் சென்றேன்!
இலையுதிர் காலமாதலால்
காணாமல்போயின நிழல்கள்!

தாகம்தணிக்க தண்ணீர்தேடித்
தொடர்ந்ததென் பயணம்!
கோடைக்காலம் ஆதலால்
வற்றிப்போயிருந்தன வளைந்து
நெளிந்த ஆறுகள்!

பசிபோக்க இரைதேடி
அலைந்தேன் அங்குமிங்கும்!
யாரோசிதறிய மிச்சங்கள்
என்இரைப்பைக்குள்!

போதவில்லையானாலும்
புசித்தது போதுமென்ற
திருப்தியெனக்குள்!

ஆனாலும் வந்திடும்
வசந்தம் ஓர்நாள்!

தங்கிட நிழலும்,
தாகம்தீர்க்க நீரும்,
பசிக்கு உணவும்,
பாங்காய்க் கிடைத்திடுமென்ற
நம்பிக்கையில் விரிந்தனயென்
சிறகுகள்!

காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா

News

Read Previous

தீண்டாமை நன்று!

Read Next

முதுகுளத்தூரில் குமரிஅனந்தன் நடைபயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *