நட்சத்திர மீன்கள்

Vinkmag ad

நட்சத்திர மீன்கள்

எண்ணில் அடங்கா தூரத்தில் விண்மீன்கள்
கண்ணில் பட்டுத் தெரிக்கும் வைர
பூக்கள்
இருந்து ஒளிர்ந்தால் வழியைச்
சொல்லும்
எரிந்து விழுந்தால் விழியை
வாங்கும்

விண்ணில் ஒளி தர இரண்டு உண்டு
என்னில் ஏன் இல்லை அந்த ஒன்று
வானிற்கு வழங்கிய வல்லவனே
ஏன் எனக்கு மறுத்தாய் ஏகவனே
கண்ணீரோடு கேட்டது கடல்

கடலே கடலே கவலை கொள்ளாய்
கலை நயத்தோடு ஒன்று தருவேன்
கடவுள் சொன்னான் கருணையோடு
அலைகடல் கேட்டதுஅமைதியோடு

நிலத்திலும் நீரிலும் வாழும் ஒன்று
நீலவானில் எரிந்து சாகும் ஒன்று
வடிவினை ஒன்றாய் அமைத்தவன்
வாழ்வியல் இரண்டாய் வடித்தான்

உயிரினம் என்றொன்று இருந்தால்
உருவமைப்பு என்றொன்று உண்டு
வாய் எங்கே வயிறு எங்கே இதற்கு
வாழ்வதும் கடினம் தான் அதற்கு

ஆயிரம் மயிரிழை தான் கால்களோ
ஆயினும் கைகள் தான் வீல்களோ
அசைந்து செல்லும் அழகே அழகு
இசைந்து வாழ உலகில் பழகு

விண்மீன் எரிந்தால் எரிகற்கள்
இம்மீன் இறந்தால் இளம் பூக்கள்
எதிலும் இணையா இரு துருவம் படைத்தது மட்டும் ஒரே உருவம்

நட்சத்திர மீன் நீ என்றால்
நடுவானில் ஒளிற வேண்டும்
திரைவானில் மிளிர வேண்டும் நீயோ
சுடுமண்ணில் தானே உழல்கின்றாய்

உன்னை உணவாய் உண்ண
எம்மைத் தடுத்த இறையை வணங்கி
இம்மையில் ஏற்றம் கொள்வாய்
மறுமைதான் உனக்கு இல்லையே

எம் எம் முஹம்மது யூசுப். உடன்குடி

News

Read Previous

தேனும் லவங்கப் பட்டையும்

Read Next

அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *