தோற்றுவாய்

Vinkmag ad

—————தோற்றுவாய்—————

-கதிர் விரியும் வேளை கரம் ஏந்தி-

யா அல்லாஹ்!
இரக்கத்தின் இரட்சகனே!

யா ரஹ்மான்!
எங்களின் பாதுகாவலனே!

கல்பில் கடுகளவு ஈமான் இருந்தாலும்
கடும் தண்டனையை விலக்குபவனே!

கட்டளைகளை நிறைவேற்றினால்
கஸ்டங்களை நீக்குபவனே!

கண்மணி நாயகத்தைப் போற்றினால்
கண்ணியம் தருபவனே!

கனிந்து குனிந்து சிரம் பணிந்தால்
கல்வி ஞானத்தை விரிவாக்குபவனே!

கடினசித்தம் கொண்டு உழைத்தால்
கடனில்லா வாழ்வை வழங்குபவனே!

கருணையோடு உறவை நோக்கினால்
கவலைகளைப் போக்குபவனே!

கடமையான தானதர்மம் செய்தால்
கண்டிப்பாய் சுவனம் தருபவனே

கறைப்பட்ட வட்டியை விலக்கினால்
குறையில்லா வாழ்வு தருபவனே!

கடைநிலை ஏழையை நேசித்தால்
கண்ணியத்தை உயர்த்துபவனே!

கண்ணீர்விட்டு கையேந்தி அழுதால்
கடும் நோய்களையும் தீர்ப்பவனே!

கடலின் நுரையளவு பாவங்களையும்
கரையச் செய்து மன்னிப்பவனே!

களங்கமில்லா உள்ளத்தால் தொழுதால்
கரை சேர்த்து கிருபை செய்பவனே!

காற்றில் தவழும் பாங்கொலி கேட்டு
காலையில் கதிர்விரியும் வேளையில்
கரம் ஏந்தி நிற்கிறோம் அல்லாஹ்
கருணை செய் ரப்பில் ஆலமீனே!

கிருபையுள்ள நாயனே!
கிருபை செய் ரஹ்மானே!

மு முகமது யூசுப். உடன்குடி

News

Read Previous

தியாகத் திருநாள்

Read Next

பாம்பன் ஜமாஅத் தலைவர் என்.அய்யூப்கான் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *