துணிவு

Vinkmag ad
துணிவு 

 
துணிந்து செய்வதெல்லாம் துணிவல்ல – எண்ணித் 
துணிந்து செய்வதே அறிவாகும் 
துணிந்தபின் எண்ணுவது இழுக்காகும். 
வள்ளுவன் கூறிய வாக்காகும் – அதை 
உள்ளத்தில் வைப்பது உயர்வாகும் .

காதலிப்பது துணிவாகும்  .

காதலை மறைத்து கல்யாணத்திற்கு முன் நாள் ,
ஓடிப்போவது துணி வல்ல. 
தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கையோடு
வெற்றி கொள்வதே துணிவாகும் . 

தடைகளை நினைந்து , தோல்விக்கு பயந்து
தற்கொலை செய்வது துணிவல்ல .

தெரிந்தவரையில் , புரிந்த வரையில்
தேர்வை எழுதுதல் துணிவாகும்
துண்டுச் சீட்டின் துணையைக்கொண்டு
தேர்வை எழுதுதல் துணிவல்ல .

நேர்மையால்  ,  திறமையால் நம்பிக்கை கவர்ந்து
 தேர்தலில் வெல்வது துணிவாகும்.
கள்ள ஓட்டாலும் ,காசு பணத்தாலும்
தேர்தலில் வெல்வது துணிவல்ல.

தன்வலி  கொண்டு  தைரியமாக
போரில் வெல்வது துணிவாகும் .
வஞ்சகத்தாலும் , சூழ்ச்சிகளாலும்
போரில் வெல்வது துணிவல்ல .

தரம் குறையாமல் , செலவுகள் குறைத்து
விலையைக் குறைத்து , விற்பனை செய்து
சந்தையில் போட்டியை சாகசத்தாலே
முந்திச் செல்வது   துணிவாகும்.

தரத்தைக் குறைத்தும் ,கலப்படம் செய்தும்
அளவைக்குறைத்தும் , பொய்களுரைத்தும்
ஏமாற்றியும்  லாபம் பெருக்க
தொழிலைச் செய்வது துணிவல்ல.

தன் அறிவாலே , தன் உழைப்பாலே ,
தன்  முயற்ச்சியாலே , தன்னம்பிக்கையாலே
தனக்குரியதை மட்டும் பெற்று
தரமாய் வாழ்வதே  துணிவாகும்

கள்ளக் காதல் துணிவல்ல.
கள்ளச் சந்தை துணிவல்ல.

கள்ளத்தனமும் துணி வல்ல.

கள்ளப் புகழும் துணி வல்ல.

எழுதவும் துணிவு வேண்டும் – அதை

ஏற்றுக்கொள்ளவும் துணிவு வேண்டும்

துணிவுடன்

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

ஆற்றல்

Read Next

தமிழக அரசும் தமிழறிஞர் விருதும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *