ஆற்றல்

Vinkmag ad

ஆற்றல்

எண்ணிலா ஆற்றல்கள் இணைகின்ற போதுதான்

முன்னேற்றம் முழுமை பெறும்!

விண்ணோக்கி மின்கலம் பாய்ந்து செல்லுகையில்

விஞ்ஞான ஆற்றலென்று வியந்து சொல்லுவோம்!

காற்றதன் ஆற்றலைக் கண்டறிந்தபின்தான்

காற்றலை மின்சாரம் உண்டானது!

நீரதன் சக்தியை ஆய்ந்து உணர்ந்தபின்

நீராவி எஞ்சினும் நீர்மின்சாரமென..

பல்வகை ஆற்றல்கள் பாரினில் காண்கிறோம்!

மனித ஆற்றல் மாபெரும் சக்தி!

மறைக்க முடியா உண்மையிது!

மக்கள் சக்தி மகத்தானது –

நாளும் அதுவே நமை ஆளுது!

கவிஞர் காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்

பம்மல்,  சென்னை 600 075

தற்போது – அபுதாபி – அமீரகம்

00971 50 2519693

00971 50 4497052

kaviri2015@gmail.com

www.thamizhnadhi.com

News

Read Previous

விற்க… வாங்க……..

Read Next

துணிவு

Leave a Reply

Your email address will not be published.