தியாகத் திருநாள் !

Vinkmag ad
தியாகத்  திருநாள் !
 
     (   எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) 
 

உயர்வான  ஒற்றுமையை உளம்நிறையத் தியாகமதை 
                       உலகினுக்கு உணர்த்திநிற்கும் உண்மைமிகு திருநாளாய் 
                   நபிபெருமான் வழிநடப்போர் வாழ்வினிலே கடைப்பிடிக்கும்
                         நல்லஹஜ்ஜுப் பெருநாளை நாடெல்லாம் போற்றிடுமே !
 
                வாழ்நாளில் நல்லவற்றை வையகத்தில் செய்வார்க்கு 
                     வாழ்நாளில் பெருநாளாய் வாய்த்துவிடும் ஹஜ்ஜுவுமே 
               வாழ்வினிலே நல்லவற்றை மனமேற்றி நில்லார்க்கு
                      வாழ்வினிலே பெருநாளாய் அமைந்துவிடா ஹஜ்ஜுவுமே !
 
                கூத்தாடிக் கும்மாளம் அடிக்கின்ற கூட்டத்தார் 
                   குறையுடைய வாழ்க்கையினை தேர்ந்தெடுத்த கூட்டத்தார்
               நபிபெருமான் வழிதன்னை புரிந்துவிடா கூட்டத்தார் 
                      நாட்டினிலே ஹஜ்ஜுதனை நாடிவிடல் நல்லதல்ல !
 
              சன்மார்க்கம் நாடுவோர்க்கும் சமூகநலன் தேடுவோர்க்கும்
                  இம்மாநிலத்தில் ஹஜ்ஜு ஏற்றதாய் அமையுமன்றோ 
             தியாகசிந்தை இல்லாரும் அர்ப்பணிப்பு செய்யாரும்  
                 திருநாளாம்  ஹஜ்ஜுதனை  கடைப்பிடித்தல் முறையன்று !
 
             புத்தாடை  புனையுங்கள் புத்துணர்ச்சி பெற்றிடுங்கள் 
                     மக்காவின் நாயகரை மறவாமல் நினைத்திடுங்கள் 
            மூடத்தனைத்தை யெல்லாம் மூட்டைகட்டி வையுங்கள்
                     ஏழைகளின் சிரிப்பினிலே இறைவனையே காணுங்கள்  ! 
 
               மக்காவை தரிசித்து மாகடமை ஆற்றிடுங்கள் 
                     பெற்றுநிற்கும் செல்வமதை மற்றவர்க்கும் உதவிடுங்கள் 
               நற்றவத்தால் உபதேசம் பெற்றுவந்த நபிபெருமான் 
                      உற்றதுணை எனநினைத்து ஒற்றுமையாய் வாழ்ந்திடுங்கள் ! 
 
                தக்கோராய் வாழுதற்கு மக்காவை தரிசியுங்கள் 
                       தரமிக்க குரான்தன்னை தவறாமால் ஓதுங்கள் 
                உண்மையுடன் ஹஜ்ஜுதனை உளமார கொண்டாடி 
                       உலகமெலாம் நன்மைவர ஒழுக்கமுடன் வாழுங்கள் !
 
                  ஹஜ்ஜுசெலும் நபிபக்தர் கடமையினைப் போற்றிடுங்கள் 
                         ஹஜ்ஜுவெனும் திருநாளை கண்ணியமாய் பார்த்திடுங்கள் 
                  கருணையன்பு பாசமுடன் ஹஜ்ஜுநாளில் இருந்திடுங்கள் 
                           கையெடுத்து வணங்கிநின்று கடவுளையே போற்றிடுங்கள் ! 
                     

News

Read Previous

சவால்களின் காலம்

Read Next

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *