தம்பிகள்

Vinkmag ad

தம்பிகள்
——————
தந்தை என்றவுடன் நினைவில் நிற்பது
சிலசீண்டல்கள் கேலிப்பேச்சுகள்!
எல்லாவற்றிலும் தொனிக்கும் அக்கறை!
அவசியமான சமயத்தில் அளவான
அறிவுரைகள்!
மனம் சோர்ந்து போகும்போது எங்கிருந்தாலும் வந்துநிற்கும் பண்பு!
இவைகள் எல்லாவற்றையும் தம்பிகளிடமும் காணும்போது இவர்களும் தந்தையரோ!!!

இலவு காத்த கிளி!
———————————–
கோடிக்கனவுகளுடன் திருமணம்
எதிர்பார்ப்புகளோ அதிகமில்லை!
ஆசைக்கணவரின் மனதில்
எனக்கான தனியிடம்!
தொழிலுக்கு முதலிடம் என்றார்!
தன்குடும்பத்திற்கு தனியிடம் என்றார்!
குழந்தைகளுக்கே முன்னுரிமை என்றார்!
எல்லாக்கடமைகளும் முடிந்தது
இனியாவது எனக்கெனமட்டும் என்றேன்!
இல்லை எனக்குத்தான்
என்றழைத்துச்சென்றது மரணம்!!!

வாழ்க்கைப்பயணம்
————————————-
முருகனைப்போலொரு கணவன் என்றேன்
சண்முகநாதனே கணவரானார்!
அவன் தேவியரைப் போல் குழந்தைகள் இரண்டு வந்தன!
குமரனைப் போலும் ஒன்று!
நிறைய உறவுகள் கண்டேன்
உறவுகளோடுபேசி மகிழ நினைத்தேன்!
உறவுகளால் பேசப்படும் பொருள் நானானேன்!
எப்போதும் விமர்சிக்கப்படுவதாலேயே
சரியாகச் செயல்படுகிறேன் என்று
இறுமாந்திருந்தேன்!
இறுமாப்பு கர்வமாயிற்று கணவரைப் பிரிந்தேன்!
திரும்பிப்பார்க்கிறேன்
கடந்து வந்த பாதை சரிதானா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!!!

மகள்
———–
பெண்ணாய்ப் பிறந்த போது வருந்தியவர்களை
நன்றாய் வளர்ந்து தேற்றினாய்!
போட்டிகளிளெல்லாம் முதலிடம் பிடித்து மகிழ்வித்தாய் !
நல்ல மருமகள் என்று பேரெடுத்தாய் !
நல்ல தாயுமானாய்
உன் குழந்தைக்கு மட்டுமல்ல
உற்சாகப்படுத்தும் போது எனக்குமே!!!

– மாரீஸ்வரி,மதுரை.

News

Read Previous

காவிரி தமிழனின் அரைநூற்றாண்டு கனவு

Read Next

ஃப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து

Leave a Reply

Your email address will not be published.