டெல்லி

Vinkmag ad
டெல்லி
================================ருத்ரா
இந்து மகா சமுத்திரத்திலும்
இப்படியொரு எதிர்நீச்சல்.
கெஜ்ரிவால்
ஜனநாயகத்தின்
ஆரிக்கிள் வெண்டிரிக்கிள் எல்லாம் புகுந்து
அதன் துடிப்புகளை
உயிர்ப்பு மிக்க துடிப்புகள் ஆக்கினார்.
எட்டு மாதங்களுக்கு முன் வந்த‌
அந்த ஓட்டுகளின் பிரளயத்தைப்பொன்ற‌
பிஞ்சு சுநாமி தான் இதுவும்.
அலைகள் ஓய்ந்தபின்
ஒதுங்கிய அறிக்கைகள் அறிவிக்கைகளில்
நம் மண்ணின் வாசம்
தடம் புரண்டுவிடுமோ
என்ற
நுண்ணிய அச்சத்தின்
கோடிக்கால் பூதம் இது.
ஒரு நகரம் தானே!
இந்த சிரட்டைக்குள்ளா
இந்து ராஷ்டிரம் முடங்கிவிடப்போகிறது?
சூலங்கள் மீசை முறுக்கலாம்.
இருப்பினும்
தலைநகரத்தின் நரம்போட்டம்
ஒரு சிந்தனைக்கபாலத்தின்
மாணிக்கக்கதவுகளை
தட்டிப்பார்த்திருக்கிறது.
“ஈஸ்வர அல்லா தேரே நாம்”
தேசப்பிதாவுக்குள்
அலையடித்த கீதம்
ஒதுங்குவதும் இல்லை!ஓய்வதும் இல்லை!
=======================================================

News

Read Previous

கடையில் செல்லிடப் பேசி திருடியவர் கைது

Read Next

மின்நூல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *