மின்நூல்கள்

Vinkmag ad

மின்நூல்கள் செய்வது எப்படி?
நம்மிடம் உள்ள நூல்களை நாம் மின்நூல்களாக செய்து வைத்துக் கொள்வதில் ஒரு வசதி என்னவென்றால். நாம் வாங்கும் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பேப்பர்கள் வண்ணம் மாறி, கரையான் அரித்து, பைண்டிங் சிதைந்து படிக்க முடியாமல் போய்விடும். எப்போதும் கிடைக்கும் நூல்கள் என்றால் பரவாயில்லை. சில அரிதான நூல்கள் திரும்பக்கிடைக்காது என்பதால். அவற்றை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தோ..அல்லது கேமரா மூலம் புகைப்படமாக எடுத்தோ..புத்தகத்தை பிடிஎப் முறையில் மாற்றி மின்நூல்களாக சேமித்து வைத்துக்கொண்டால்.அதற்கு அழிவில்லை. புத்தகத்தை இரவல் கொடுக்க முடியாது. திரும்பவரவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. மின்நூலில் அந்த பிரச்சினை இல்லை. எத்தனை பேருக்கு கொடுத்தாலும் அது தொலைவதில்லை.

 

சரி எப்படி மின்நூல் செய்வது என்ற வழிமுறைக்கு வருவோம்.

 

இதற்கு தேவையான உபகரணங்கள் சில-

 

  1. ஸ்கேனர் அல்லது கேமரா
  2. மேசைக்கணினி அல்லது மடிக்கணினி
  3. மின்நூல் செய்வதற்கு தேவையான மென்பொருள்கள்.
  4. ஸ்கேன் செய்வதற்கு புத்தகங்கள். இதை நீங்கள் இரவல் வாங்கி கூட செய்து திருப்பி தந்துவிடமுடியும்.அல்லது நூலகங்களில் எடுத்து வந்தும் செய்யலாம். இதற்காக நீங்கள் செலவிட வேண்டியதில்லை. நீங்கள் படிப்பதற்காக வாங்கும் நூல்களே போதுமானது.
  5. பொன்னான நேரம்,கொஞ்சம் உழைப்பு.

 

 

ஸ்கேனர்

 

ஸ்கேனர் வாங்கும் போது 300 டி.பி.ஐ அளவில் படங்களை சேமிக்கும் வசதி உள்ளதாக வாங்கவேண்டும். பெரும்பாலும் அப்படித்தான் கிடைக்கிறது.

 

ஸ்கேனரில் புகைப்படத்தின் தரத்தை நிர்ணயிக்க கூடிய பிக்சல் அளவை செட் செய்யவேண்டும். செட்டிங் பகுதிக்கு சென்று 300டிபிஐ என்று செட் செய்து கொள்ளுங்கள்.கீழே சில படங்கள் எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளது. ஸ்கேனர் எந்த நிறுவனமாக இருந்தாலும் அடிப்படை ஒன்றுதான் என்பதால் இந்த படங்களில் உள்ள விபரங்களை நன்கு கவனித்து வைத்துக்கொண்டால் போதுமானது.

 
கலர்,பிளாக் அன்ட் ஓயிட், கிரே போன்றவற்றில் கிரே ஸ்கேல் கொடுக்கலாம். வண்ணபுகைப்படங்கள் உள்ள நூலாக இருந்தால் கலர் தேர்ந்தெடுக்கலாம்.

டிப்ஸ் – புத்தகத்தை வைத்து மூடியவுடன் அதன்மீது சிறிது கைகளால் அழுத்தம் கொடுத்து புத்தகத்தை நன்கு ஸ்கேனரில் படியும் படி எடுத்தால் நடுவில் விழும் நிழலை குறைக்கலாம். இதனால் ஓரங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக பதிவுசெய்யலாம்

 

கேமரா

 

கேமாரவில் அதிகபட்ச தரத்தை செட் செய்து கொள்ளுங்கள்.  ஒரு வெள்ளை பிண்ணனி தேவை என்பதால் இதற்கு வெள்ளைநிற பேப்பர். அல்லது வெள்ளை நிற அட்டைகள் . அல்லது வெள்ளைநிற துணி இவற்றில் ஒன்றை வைத்து அதன் புத்தகத்தை வைத்து புகைப்படம் எடுக்கவேண்டும்.

 

 

 

இந்த படத்தில் கிளிப்கள் தெரியவேண்டும் என்பதற்காக தூரத்தில் வைத்து எடுத்துள்ளேன். மற்றபடி வேண்டிய அளவிற்கு கிளிப் தெரியாமல் கூட அருகில் வைத்து எடுத்தால் போதுமானது.

 

பக்கங்கள் புரளாமல் இருக்க கிளிப்களை பயன்படுத்தலாம். பேப்பர் கிளிப்கள் அல்லது, துணி உலர்த்தும் போது காற்றில் துணிகள் விழுந்துவிடாமல் இருக்க பயன்படுத்துகிற கிளிப்களும் பயன்படுத்தலாம்.

 

இயற்கையான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். ப்ளாஷ் பயன்படுத்த தேவையில்லை.

 

மேலே கூறியுள்ள முறையை பயன்படுத்தி புத்தகத்தை JPEG என்ற ஃபைல் பார்மெட்டில் ஒரு போல்டரில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

டிப்ஸ் – படம் எடுக்கவேண்டிய புத்தகத்தை புகைப்படம் எடுக்கும் முன்பாகவே சில வார்ம் அப் செய்யுங்கள். வாக்கிங், ஜாக்கிங் செய்யும் முன், கை கால்களை நீட்டி, மடக்கி சில சேஷ்டைகள் செய்வது போல.. புத்தத்தை நன்றாக விரித்து அழுத்துங்கள். இவ்வாறு இருபது பக்கங்களுக்கு ஒருமுறை பிரித்து அழுத்தம் கொடுத்து நன்றாக விரியும் படி செய்தால் படம் நன்றாக வரும். ஓரங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக பதிவாகும்.

jpeg என்ற ஃபைல் ஃபார்மெட்டில் உள்ள புகைப்படங்களை நேரடியாக pdf ஃபைல் ஃபார்மெட்டுக்கு மாற்ற பல மென்பொருள்கள் உள்ளது. ஸ்கேனர் அல்லது கேமரா மூலம் எடுத்திருக்கும் படங்களை சிறிது திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

 

அதாவது ஸ்கேன் செய்யும் போதும், கேமரா மூலம் படம் எடுக்கும் போதும், இரண்டிரண்டு பக்கங்களாக வைத்து எடுத்திருப்போம். அதை ஒரு தனித்தனியாக ஒவ்வொரு பக்கத்தையும் பிரிக்க வேண்டும். CROP என்ற முறையில், PHOTOSHOP, PAINT.NET, PICASA MICRSOFT OFFICE IMAGE EDITER போன்ற மென்பொருளின் உதவி கொண்டு பிரிக்க இயலும் என்றாலும், இந்த முறையில் பிரிக்க(CROP செய்ய) வேண்டும் என்றால் நிறைய நேரம் செலவாகும். ஆனால் மிக எளிமையாக இரட்டை பக்கங்களை ஒற்றை பக்கங்களாக பிரிக்கவும் அதை பிளாக் அன்ட் ஓயிட்டாக மாற்றவும் உதவும் மென்பொருளின் பெயர் – SCAN TAILOR இது முற்றிலும் இலவசமான மென்பொருள்

 

ஸ்கேன் டெய்லர் என்ற மென்பொருளின் மூலமாகத்தான் இனி தயார் செய்து வைத்திருக்கும் புத்தகத்தின் படங்களை திருத்த இருக்கிறோம். அதற்கு முன் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும்..

 

இங்கு ஸ்கேன் டெய்லர் மென்பொருளின் டவுன்லோடு லிங்க்,மற்றும் ஆங்கிலத்தில் உள்ள மின்நூல் கைடு, மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் வீடியோ பாடம், ஆகியவற்றின் லிங்குகள்:

 

  1. ஸ்கேன் டெய்லர் மென்பொருள் 32 பிட்

 

  1. ஸ்கேன் டெய்லர் மென்பொருள் 64 பிட்

 

  1. ஸ்கேன் டெய்லர் ஆங்கில கையேடு

 

  1. ஸ்கேன் டெய்லர் ஆங்கில் வீடியோ பாடம்.

 

 

உங்கள் கணினிக்கேற்றவாறு பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். ஒரளவு அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதும். 3,4 வதாக கொடுக்கப்பட்டிருக்கும் மின்நூல் கைடு மற்றும் வீடியோ பாடங்களை ஒரு முறை பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

 

 

இனி நாம் இதற்கான செயல்முறை விளக்கத்திற்கு போய்விடலாம். முழுக்க முழுக்க படங்களுடன் தமிழில் இந்த மென்பொருளைப்பற்றி கூற இருக்கிறேன்.

News

Read Previous

டெல்லி

Read Next

சார்ஜாவில் கல்விக் கண்காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *