சாதனை

Vinkmag ad

 

காரைக்குடி பாத்திமாஹமீத், ஷார்ஜா

 

வானத்தை வில்லாக

வளைப்பது சாதனையல்ல,

வறியவர்களின் ஏழ்மையைக்

களைவதே சாதனை !

 

தண்ணீர்த் தொட்டிகள்

அமைப்பது சாதனையல்ல,

ஏழைகளின் கண்ணீரைத்

துடைப்பதே சாதனை !

 

இலவச உணவு எப்போதும்

வழங்குவது சாதனையல்ல,

இல்லாதாரின் கனவுகளை

நனவாக்குவதே சாதனை !

 

கொடிகட்டிப் பறப்பது

என்றென்றும் சாதனையல்ல,

ஏழையொருவனுக்கு எழுத்தறிவித்தலே

உயர்ந்த சாதனை !

 

பெண்மையை அடக்கி

ஆள்வது சாதனையல்ல,

நன்மதிப்புக் கொடுத்து

மேன்மை காண்பதே சாதனை !

 

ஆகாயத்தில் உயரப்

பறப்பது சாதனையல்ல,

அன்னையின் மனதில்

உயர்ந்த இடத்தில்

இருப்பதே சாதனை !

 

அனாதை விடுதிகளுக்கு

அன்னதானம் வழங்கி

வருவது சாதனையல்ல,

பேணிவளர்த்த நம்பெற்றோரை

முதியோர் இல்லம் அனுப்பாமல்

இருப்பதே நம்பெரும் சாதனை !!

 

News

Read Previous

இயற்கையைப் பார்ப்போம் !

Read Next

தேர்தல்

Leave a Reply

Your email address will not be published.