இயற்கையைப் பார்ப்போம் !

Vinkmag ad

காரைக்குடி பாத்திமா ஹமீத், சார்ஜா

 

மது ஒழிப்புப் போராட்டம்

மனிதர்களுக்குத்தான் !

எந்தவண்டும் மதுவுண்ட

மயக்கத்தில் யாருக்கும்

கஷ்டங்கள் கொடுப்பதில்லை !

 

சாதிச் சண்டைகள் என்றென்றும்

மனிதர்களுக்குத்தான் !

எந்தச் சேவல்களும் மதத்திற்காக

சண்டைகள் போடுவதில்லை !

 

தீண்டாமை என்பது

மனிதர்களுக்குத்தான்

எந்தத் தென்றலும்

யாரையும் தீண்டாமல் விடுவதில்லை !

 

ஏற்றத்தாழ்வுகள் என்றென்றும்

மனிதர்களுக்குத்தான் !

எந்த மழையும் பணக்காரனுக்கு

மட்டும் பெய்வதில்லை !

 

ஏமாற்றுதலும் எதிரிகளும்

மனிதர்களுக்குத்தான் !

எந்தக் காகமும் தான் மட்டும்

உண்டு களித்ததில்லை !

 

உயர்வும் தாழ்வும்

மனிதர்களுக்குத்தான் !

எந்த பூமியும் உயர்வானவனுக்காக

சுற்றுவது கிடையாது !

 

இயற்கையைப் பார்ப்போம்

இணைந்து வாழ்வோம் !

அரிவாள்கள் முட்களைக்

களையட்டுமே !

 

கம்புகள் அடுப்பெரியப்

பயன்படட்டுமே !

 

அன்பால் அனைவரும்

இன்பமாய் வாழ்வோமே !

 

News

Read Previous

நிழலும் நிஜமும்

Read Next

சாதனை

Leave a Reply

Your email address will not be published.