சாதனை

Vinkmag ad

வானத்தை வில்லாக
வளைப்பது சாதனையல்ல!
வறியவர்களின் ஏழ்மையை
விலக்குவதே சாதனை!

தண்ணீர்த் தொட்டிகள்
தருவது சாதனையல்ல!
ஏழைகளின் கண்ணீரைக்
களைவதே சாதனை!

அநாதை விடுதிகளுக்கு
அன்னதானமிடுவது சாதனையல்ல!
பேணிவளர்த்த பெற்றோரை
முதியோரில்லம் அனுப்பாத்தே சாதனை!

பெண்மையை அடக்கி
ஆள்வது சாதனையல்ல!
நன்மதிப்புக் கொடுத்து
மேன்மை காண்பதே சாதனை!

காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா

News

Read Previous

பெண்களும், கல்வியும்

Read Next

செப்.13 ராமநாதபுரத்தில் மகாகவி பாரதி விழா

Leave a Reply

Your email address will not be published.