கொரோனா தாக்கம்

Vinkmag ad

கொரோனா தாக்கம் 

உஹானில் உருவாகி 
உலகெமெங்கும்  பரவி 
உயிர்க் கொல்லிக்  கிருமியாகி 
உலகையே ஆட்டுவிக்கும் 
கொரோனா என்னும் 
கொடிய கிருமியிடமிருந்து
தப்பிக்க வழிதேடி 
தவிக்கின்ற மானுடரே ,
 விதியென்று எண்ணி 
வேதனைப் படாமல் 
மதிகொண்டு உடனடியாய் 
மருத்துவமனை செல்வீர் . 
 
துப்புதல் தவிர்த்திடுவீர். 
கைசுத்தம் பேணிடுவீர்
கைகுலுக்கல் தவிர்த்திடுவீர் , 
கரம்கூப்பி வணங்கிடுவீர் .
 
பொது இடங்களில் அதிகம் 
கூடுதல் தவிர்த்திடுவீர் .
மதுக்கூடம் தவிர்த்திடுவீர் .-விலை 
மாதுறவு தவிர்த்திடுவீர். 
வெளிநாட்டுப் பயணங்கள் 
வேண்டாமே சிலகாலம் ,
 
வருமுன் காப்பதென்ற 
வள்ளுவரின் சொல்லை
வாழ்வில் கடைபிடிப்பீர் 
வாழ்வாங்கு வாழ்ந்திடுவீர். 
 
சுத்தம் சோறுபோடும் என்ற 
பழமொழியை நினைவில் வைப்பீர் 
நித்தம் கடைபிடித்து 
நெடுங்காலம் வாழ்ந்திடுவீர். 
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
17.03.2020  

News

Read Previous

யாரும் வாழ தகுதியற்ற அந்த நகரத்து வீதிகளில்…..

Read Next

திருப்புக்கொளியூர் அவிநாசியும் சீனாவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *