குடியரசு தினம்

Vinkmag ad

குடியரசு தினம்; கோபத்தில் மனம்

குடியரசுக் கொண்டாட்டம் வருடந்  தோறும்
*****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும்
விடியாத இரவினிலே பிறந்த நாட்டில்
*****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில்
முடியாத நிலைமைக்கு வந்த தாலே
*****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே
படியாத அரசியலார் போடும் வேசம்
***** பகற்கொள்ளை நடக்குமெங்கள் பார(த) தேசம்

புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம்
***** பொய்யுலகி  னாசையிலே மூழ்கிப் போனோம்
மனிதமானம் என்னவென்றுத் தெரியாக்   காயம்
*****மலையேறிப் போனதிங்கு மனித நேயம்
இனிதானச் சொற்களுக்கிங்  கிடமே யில்லை
*****இந்தியாவில் கொலைவெறிக்குப்  புகழின் எல்லை
கனிவானக் கவிதையிலும் கலந்து போச்சு
*****கலப்படம்தான் கலைப்படமாய் விளைந்து போச்சு

ஆக்கம்: அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர் )

News

Read Previous

ஸஃ பர்

Read Next

விதவை

Leave a Reply

Your email address will not be published.