கவிதை : லால்பேட்டை மௌலவி அன்சாரி

Vinkmag ad

இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பாக குற்றாலத்தில் இரண்டு நாள் பயிலரங்கும், மூன்றாம் நாள் தென்காசியில் மாநாடும் நடைப்பெற்றது இம்மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் முன்னிலையில் தி.மு. அப்துல் காதர், எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் கண்கானிப்பில் நை.மு. இக்பால் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பேராசிரியர் ஹாஜா கனி இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லா, தஞ்சை இனியவன், தக்கலை ஹலிமா, திட்டச்சேரி அன்வர்தீன், உள்ளிட்ட கவிஞர்களோடு லால்பேட்டை மௌலவி  முஹம்மது அன்சாரி பாடிய கவி வரிகள்

நித்திய ஜீவனென்நான் நத்திய நாயகன்
சத்தியம் செய்கின்றhன் எழுதுகோலை எண்பித்து
சித்தியும் புத்தியும் சீரமைச் சிந்தையை
சிற்றhpவாக்கி வுட்புகுத்திக் கற்பித்தான்

ஏதுமில்லறிவு என்றhங்குநில் மனிதமிதை
எழுதுகோல் எடுத்தாண்டு என்னிறை கற்பித்தான்
வேதவாp வாக்கியமும் சதுர்மறை பாக்கியமும்
தூதுவழி சாற்றியதும் எழுதுகோலின் உதவி இன்றேh?

கருச்சுமந்த அன்னையின் கண்புகாக் குழுவியுள்ளில்
பதிவேட்டு வரைவிதியை பதிப்பித்தது எழுதுகோலே
உணவளவின் நிர்ணயிப்பும் குணவழியின் செயலமைப்பும்
நோய் நாடிக்துடிதுடிப்பும் நு}ற்பதித்தது எழதுகோலே

வாழ்வளவின் நாட்குறிப்பும் பாழ்நடத்தைப் புலனமைப்பும்
பதிவமைத்துப்பாதுகாக்கும்  பணி செய்வதும் எழுதுகோலே
ஊழ்வழிந்து உடலழிந்து உக்கிமீண்டும் எழும் நாளில்
     உண்மைகளை உணர்த்துவதில்  எழுதுகோலும் பங்குகொள்ளும்
 
நிகழ்ந்தொழிந்த வாழ்க்கையிலே நித்தமும் செய்தவற்றhல்
நற்கதியா நிர்க்கதியா எனப்பகுத்து எழுதி வைக்க
நாயகனின் ஆணையேற்று நயமாய் செய்து வைக்கும்
நற்பேறு பெற்று நிறையருள் வாய்ந்தது எழுதுகோலாம.;

லவ்ஹூ கலம்யாவும் மஹ்பூழ் எனப் போற்றி
லட்சோப லட்சியங்கள் லயம் சேர்த்து வரைப்படுத்தி
பதிவுப் பெட்டகத்தை பலமாய் பாதுகாத்து
பற்றுடை வானோரை பக்கத்தில் நிற்கவைத்தான.;
கனியுண்டத்தவறிழைத்து கவிழ்ந்துலகில் வீழ்து வாழ்ந்த
ஆதமை அண்மித்து மூஸhவும் முறையிட்டார்
ஏனிதுஇ உன்னால் ஏற்பட்ட துன்பமாகும்
ஏவாளின் ஏவலினால் ஏமாந்து போனாய் என்றhர்.

நானென்ன செய்வேனோ நான் படைக்கப்படுமுன்னே
நாயகன் விதிசெய்து எழுதுகோலால் எழுதிவிட்டான்
தவுராத்தில் நீகண்டும் தர்மத்தை அறியலையா?
தவறhது இறை நியது தர்கத்தை நிறுத்தென்றhர்;.

இம்ரானின் இனியமகள் இறையுவந்த தூயமகள்
ஈசாவை அற்புதமாய் ஈன்றெடுத்த மர்யமினை
எவரெடுத்து வளர்ப்பதென யாபேரும் தர்கித்தார்
எழுத்தறிவித்தவனோ தீர்வொன்றை விண்டுரைத்தான்

எல்லோர் கையிருக்கும் எழுதுகோ லைஎடுத்து
எறிந்திடுக நீhpன்மேல், அதில்எகிறிவரும் எழுதுகோல்
யார் கைக்குறியதுவோ அவர் பெயர் கூவியழைத்து
ஏற்றிடுக மர்யத்தை  என்ற தீர்வை இறையளித்தான்

எழுதுகோல் என்பதுவை இறைமறை சொல்வதிது-அதை
எழுதிவந்து பாடுவது யான் பெற்ற பேருமது
இலக்கியக் கழகத்தின் இலட்சினையும் எழுதுகோலாம்
இவையெல்லாம் நானறிந்து எடுத்தாண்ட கவிபொருளாம்

கவிபாடும் கூட்டத்தில் கடைகோடி நானமர்ந்து
தவிப்போடு அரங்கேறி தந்துள்ளேன் சிலவாpகள்
குறையேதும் உண்டென்றhல் என் செவியோடு சொல்லிடுக
நிறையெனக்  காணுகையில் அதை கவிக்கோவிடம் கூறிடுக.

News

Read Previous

தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

Read Next

எழுதுகோல் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *