கவிக்கோ நினைவு நாள்

Vinkmag ad

கவிக்கோ நினைவு நாள்.2.6.2020. கவிக்கோ கவிதைகளில் வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி !

கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்
கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் !

கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்து
கவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் !

கொண்ட கொள்கையில் குன்றென நினறவர்
கொத்த அம்மி கொத்த சிற்பி எதற்கு ? என்றவர் !

திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை என்பதில்
தன்னம்பிக்கையுடன் உறுதியாக நின்று வென்றவர் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தவர்
சங்கத்தமிழில் ஆழந்த புலமைகள் பெற்றவர் !

தீந்தமிழ் தியாகராசர் கல்லுரியில் பயின்றவர்
தீந்தமிழை புதுக்கவிதையால் பரப்பி வென்றவர் !

எண்பது வயது வரை வாழ்ந்து சிறந்தவர்
எண்ணிலடங்காக் கவிதைகள் வடித்து நிலைத்தவர் !

பன்மொழி அறிஞராகத் திகழ்ந்த வித்தகர்
பால்வீதி என்ற முதல் கவிதை நூலை எழுதியவர் !

ஆலாபனை நூலிற்காக சாகித்ய அகாதமி பெற்றவர்
அன்பால் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் !

பெரும் பேராசிரியர் இலக்குவனாரின் மாணவர்
பல்வேறு விருதுகள் பெற்ற பெருமகனார் !

மீன் வலையா ? கொசு வலையா? வரிகளால்
மனத்தைக் கொள்ளைக் கொண்ட கவிஞர் !

புதுக்கவிதையில் தனக்கென புதுப்பாதையிட்டவர்
புரியும்படி எளிமையாக எழுதிக் குவித்த சித்தர் !

குழந்தைகளை கிழித்து விடாதீர் என்று எழுதி
கல்வியின் அவலத்தை தோல் உரித்தவர் !

ஹைக்கூ கவிதைகளும் எழுதி வழிகாட்டியவர்
ஹைக்கூ கவிஞர்களுக்கு முன்னோடியானவர் !

மரபு புதிது ஹைக்கூ என கவிதைகளின்
மூன்று வடிவங்களிலும் முத்திரைப் பதித்தவர் !

காலத்தால் அழியாத அற்புதக் கவிதைகளை
கற்கண்டாகத் தந்து உள்ளம் ஈர்த்தவர் !

தமிழகத்தின் கலீல் ஜிப்ரான் என்ற பாராட்டை
தன்னிகரிலாக் கவியரசு கண்ணதாசனிடம் பெற்றவர் !
.
உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உன்னதக் கவிதைகளில் வாழ்கிறார் என்றும் !

News

Read Previous

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது!

Read Next

ஜூன் 2, இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்தநாள்..!

Leave a Reply

Your email address will not be published.