கஜாவுக்கு நன்றிகள்

Vinkmag ad

கஜாவுக்கு நன்றிகள்

கரண்ட் இல்லை
செல்போன் இல்லை
கரண்ட் இல்லை
டிவி இல்லை

கம்ப்யூட்டர் இல் லை
இண்டர்நெட் இல்லை
கண்களுக்கு
கொஞ்சமும்
தொல்லை இல்லை..!

இன்வெர்ட்டர்
இல்லை
பவர்பேங்க்
இல்லை
எந்த மூலையிலும்
கரண்ட்
இல்லவே
இல்லை..!

தொலைந்துபோன
புத்தகங்களை
தேடி எடுத்து
வாசிக்கிறேன்.
அகிலனோடும்
சாண்டில்யனோடும்
என்னையே நான்
மறக்கிறேன்..!
ஆஹா
எத்தனை சுகம்..!
எத்தனை சுகம்…!

டெக்னாலஜிக்குள்
புதைந்து கிடந்த
என் குழந்தைகளோடும்
மனைவியோடும்
நிலாச்சோறு
சாப்பிடுவதில்தான்
எவ்வளவு
ஆனந்தம்…!

இரவு
துவங்கும் பொழுதே
கண்கள்
தூக்கத்தைத்
தேடுகிறதே..!

அதிகாலையில்
விழிகள்
தானாகவே
திறந்து
உற்சாகம்
பிறக்கிறதே..!

இயற்கையோடு
இணைந்திருப்பதில்தான்
எத்தனை
எத்தனை
இன்பங்கள்…!

டிவி சீரியல்களின்
அழுகை இல்லை…
ஒலிபெருக்கிகளின்
ஓலமில்லை..!

கண்கூசும்
விளக்குகளை
காணவே
முடியவில்லை
ஃப்ரிஜ்ஜூக்குள்
செத்துப்போன
காய்கறிகள்
இல்லை..!

இந்த
ஆனந்தம்
என்றென்றும்
நீடிக்காதா…?

இழந்துவிட்ட
வாழ்க்கைமுறை
மீண்டும் இதுபோல்
வாராதா..?

மாதத்தில்
ஒருவாரம்
கரண்ட்
இல்லாமல்
இருந்துவிட்டால்
எத்தனை
சந்தோஷம்…!

மழையிலே
ந்னைந்து
மகிழுங்கள்.
மழையின்
மகிமை
புரியும்..!

அமைதியுடன்
பேசிப்பாருங்கள்.
அமைதியின்
பெருமை
புரியும்..!

சில விஷயங்கள்
புரியும்வரை
பிடிக்காது.
புரிந்துவிட்டால்
மறக்காது..!

இயற்கை
வாழ்க்கையை
புரியவைத்த
-கஜா- புயலுக்கு
நன்றிகளுடன்
புதுக்கோட்டையிலிருந்து ஒருவன்.

News

Read Previous

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Read Next

அர்த்தமே இல்லையே !

Leave a Reply

Your email address will not be published.