“எய்ட்ஸ் “விழிப்புணர்வு!

Vinkmag ad

“எய்ட்ஸ் “விழிப்புணர்வு!

                    திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

 

 

  • “எய்ட்ஸ்” நச்சு மரத்தின்

வேர்களை விட்டு விட்டு

கிளைகளை மட்டும் வெட்டுவது

அது அழிந்திடவா வகை செய்யும்?

அல்ல !

வளர்ந்திடவே வகை செய்யும்!

  • “எய்ட்ஸ்” நச்சுமரத்தின் வேர்களை

ஆழத்திலேயே வெட்டிடுங்கள்!

விழிப்புணர்வு முரசினை

விரைவாக கொட்டிடுங்கள் !

  • சிவப்பு விளக்கு பகுதிகளை

மூடுங்கள்!

சினிமாவில் ஆபாசத்தை

தடுங்கள் !

  • காம நாவல்களை

தீயிலிடுங்கள்!

எழுத்தில் காமன் வராமலிருக்க

வேலியிடுங்கள்!

  • பெண்களை மட்டும் “விபச்சாரி” என்று விலங்கிடும்

 

பாரபட்சத்தை விலக்கிடுங்கள் !

 

விபச்சார குற்றமிழைக்கும்

ஆண்களுக்கும் விலங்கிடுங்கள்!

  • ஆசைகளுக்கு

அணை போடுங்கள்!

அது இயலாவிடில்

இல்லற வாழ்விற்கு துணை தேடுங்கள் !

  • மன இச்சைப்படி

வாழ்வதை விடுங்கள் !

மனசாட்சிப்படியே

எப்பொழுதும் நடங்கள் !

 

News

Read Previous

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் மாநாடு

Read Next

தீப்பந்தம் – குறுங்கவிதைகள் – கா.பாலபாரதி

Leave a Reply

Your email address will not be published.