உலக தண்ணீர் தினம்

Vinkmag ad
உலக தண்ணீர் தினம். 22.03.2019
நீரின்றி அமையாது உலகென்று வள்ளுவன் ,
நேர்படச் சொல்லி வைத்தான். நீரதனை நினைவினில் வைத்து தினம் தினம்
நீரதனைச் சேமிக்கணும். நீரிதனைச் செய்வதால் ,
நிலத்தடி நீர்வளம் ,
நிச்சயம் பெருகுமன்றோ. நீர் நிலை ஆக்கிரமித்த நீசர்களை வெளியேற்ற நீதிமன்றம் கூறியும் , நேர்மையில்லா அதிகாரிகள் அதனை நீர்த்திடச் செய்கின்றனர்.  நீருக்குப் போராடும் நிலை இங்கு தொடர்வதால் ,
நித்திலம் நரகமாகும். நீர்நிலைகள் தூர்வாரி மழைநீரை சேமித்தல் நிரந்தரத் தீர்வாகுமே.
நீர் கொண்ட பெருநதிகள் இணைப்பினால் வறட்சியும் வெள்ளமும்  நிலைமாறுமே. நிலையான தீர்வுகளை நிலைநிறுத்தும் ஆட்சிக்கு நிச்சயம் வழிகோலுவீர். சோறின்றி சிலகாலம் பிழைக்கலாம்,
ஆயின்
நீரின்றி பிழைத்தலரிது.  நீராடை இல்லாமல் இருக்கலாம் ,
ஆயின்
நீராடல் தேகநலமே. நீரிதனை உணர்ந்து செயல்பட்டால்  ஓங்கிடும்  நிச்சயம் தேசநலனே.
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

News

Read Previous

“என்னமோ போ”

Read Next

எண்ணத்தில் தூய்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *