“என்னமோ போ”

Vinkmag ad

“என்னமோ போ”
================
சொல்ல முடியாத சோகம் நிறைந்திங்கு
மெல்லக் கரைகின்ற வெற்றியும் __ இல்லையே
ஆன்மீகக் கல்வி அனைத்துத் துறைகளில்
மேன்மைகள் போயின மேலோர்கள் _ சான்றாகச்
செந்தமிழும் மெல்லமெல்லச் சீரழியும் பாடலைத்
தந்தவொரு நாடென்று தன்னிலை _ சிந்தனையே
இல்லாத நம்மவர்கள் என்னதான் செய்வரோ?
வெல்லதான் அச்சமின்றி வீணாகச் _ செல்லுதே
பாலுணர்வுச் செய்கையில் பாழாகிப் போனதால்
தோலுணர்வு மட்டுமே தூண்டுகின்ற __ வேலைகளால்
மெய்யழிந்து போனதிங்கு மெய்யுணர மாட்டீரோ?
பொய்யுலகாம் என்னமோ போ.

ஆக்கம்:
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்.

News

Read Previous

குடம்

Read Next

உலக தண்ணீர் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *