உதவி நிற்போம் !

Vinkmag ad

உதவி நிற்போம் !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )

மாண்டவர் கணக்கை எண்ணில்
மனமெலாம் கலங்கு திப்போ
மீண்டவர் வாழ்வு கூட
வீதியில் நிற்றல் ஆச்சே

ஆண்டவன் கணக்கில் யாவும்
அப்போதே இருக்கு என்று
தோன்றிடும் வண்ணம் பேசும்
துடுக்கினைக் கேட் கின்றோமே

இயற்கையின் சீற்றம் வந்து
இரக்கத்தை எடுத்து விட்டு
துயரெனும் பரிசைத் தந்து
துவம்சமே செய்த தங்கே

நேபாள மக்கள் வாழ்வில்
நீண்டதோர் துயர ஆறு
ஓடிய செயலைக் கண்டு
உலகமே பதறிப் போச்சு

துன்பத்தில் ஆழ்ந்து நிற்பார்
துயரெலாம் துடைக்க வேண்டும்
அன்புடன் ஒன்று சேர்ந்து
அனைவரும் உதவி நிற்போம் !

News

Read Previous

பிளஸ் டூ தேர்ச்சி

Read Next

எஸ். தரைக்குடி ஜாமிஆ மஸ்ஜித் திறப்பு விழா அழைப்பிதழ்

Leave a Reply

Your email address will not be published.