உங்களின் சிறந்த நண்பர்

Vinkmag ad

‘உங்களின் சிறந்த நண்பர்’’
…………………………………….

உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு.
ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்த அளவுக்கு அவசியமோ,அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம்..

நமது பெற்றோர்களையும்,சகோதரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடியாது.ஆனால் நண்பனாக யார் வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.

ஒருவரின் வாழ்க்கையே திசை மாற்றும் வல்லமை கொண்டது நட்பு.,

நல்ல செயல்கள் மீது உங்கள் எண்ணங்களை ஊன்ற வைக்கும்படி ஓர் உண்மையான நண்பரால் செய்ய முடியும்.

துன்பத்தில் இருக்கும்போது அவர் உங்களை உற்சாகப் படுத்தி தூக்கிவிடுவார். உங்கள் துக்கத்திலும் பங்கு கொள்வார்.

எல்லா துன்பங்களிலும் தோள் கொடுத்து, இன்பங்களில் பங்கு பற்றி, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன்.

பணம் வரும் போது வருபவனும், பதவிக்காக உடன் இருப்பவனும் நண்பன் இல்லை. உண்மையான நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் தவறான நட்பு உங்களை அழித்து விடும்

இளைஞன் ஒருவன் கயிற்றுப் பாலத்தில் நடந்து வந்தான்., அது மிகுந்த உயரத்தில் இருந்தது, அவன் மிகுந்த பயத்துடன் அந்த பாலத்தை கடக்க முடியாமல் தவித்தான்..

அந்த நேரத்தில்தான் அவனுடைய நண்பன் அந்த பாலத்தில் மறு முனையில் நின்று கொண்டிருப்பதை பார்த்தான். அந்த இளைஞன் தன் நண்பனை தன்னிடம் வருமாறு கூவினான்..
ஆனால் அவன் வரவில்லை. பல முறை அந்த இளைஞன் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

மிகுந்த கோபம் அடைந்த அந்த இளைஞன் பாலத்தை ஒரு வழியாக கடந்து மறுபுறம் வந்து சேர்ந்தான்..பல முறை அழைத்தும் உதவிக்கு வராத தன் நண்பனை கொட்டித் தீர்த்தான்

ஆனால் அவன் அதற்கும் சிரித்துக் கொண்டுதான் இருந்தான். அப்போது அந்த இளைஞன் எதோச்சியாக தன் நண்பனின் கைகளை பார்த்தான்.

அந்த உடைந்த, பழுதடைந்த கயிற்றுப் பாலத்தை தன் நண்பன் கைகளால் பிடித்துக்கொண்டு இருந்ததால் கையில் இரத்தம் வழிந்தது…தன் நண்பனை அப்படி யே வாரி அணைத்துக் கொண்டான்..

நண்பனுக்கு துன்பம் வந்தால் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்காமல் உடனே உதவக் கூடியதுதான் நட்பு.

நல்ல நட்பு வளர் பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது
.அதை இழந்து விடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.

ஆம்.,நண்பர்களே..,

தீய நட்பு தேய் பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும்.

எனவே நல்ல நட்பை நேசிப்போம்!

நல்ல நட்பை வாசிப்போம்!!

நல்ல நட்பையே சுவாசிப்போம்!!!( ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி..)

News

Read Previous

இன்று ஒரு கதை…

Read Next

எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது !

Leave a Reply

Your email address will not be published.