இலக்கு..

Vinkmag ad

இலக்கு..

தொடுக்கும் கணைக்கும் இலக்கது வேண்டும் எனில்

நடக்கும் வாழ்க்கைக்கு இலக்கு வேண்டாமா?

எடுக்கின்ற பணிதனை முடிப்பது எப்போது

என்கின்ற கணக்கைத்தான் இலக்கு என்கின்றோம்!

நடப்பது நடக்கட்டும் என்று கால்கள் நடந்தால்

நாம் எங்கே சேர்கிறோம் என்பதில் நிச்சயமில்லை!

படிப்பது முதலாய் பள்ளித்தேர்வுகள் அனைத்திலும்

இருப்பது இலக்கு .. அடைவது திறமை!!

வாழ்க்கை முழுவதும் வருகின்ற இலக்குகள்

நமக்குள் நாமே வகுத்திடும் புள்ளிகள்!

புள்ளிகள் இல்லா கோலங்களில்லை..

ஒவ்வொரு புள்ளியும் உன்வழிகாட்டும்!

வெற்றியை நோக்கி விரையும் புரவிகள்

எட்டிப் பறிக்கும் இலக்கினைக் காட்டுங்கள்!


கவிஞர் காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல்,  சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052

 

News

Read Previous

ஆடை கட்டுப்பாடு

Read Next

இலங்கும் இஸ்லாமிய இல்லறம்

Leave a Reply

Your email address will not be published.