இருளிலிருந்து ஒளி……

Vinkmag ad

இருளிலிருந்து ஒளி……
> =============================================ருத்ரா
>

சிறப்பான கவிதை. ரசித்தேன்,

நா. கணேசன்

>
> “தமஸோ மாம் ஜ்யோதிர் கமய…”
> அந்த கும்மிருட்டுக்கும்
> நீலப்பிழம்பின் வானச்சதைக்கும்
> சமஸ்கிருதம் புரியவில்லை.
> தமிழும் தெளியவில்லை.
>
> விதை பிளந்து
> மண்ணைத்தின்றது.
> வேர் நீட்டி
> நீர் குடித்தது.
> மயிர்கள் போல வேர்த்தூவியாய்
> மண்ணின் இதயத்தோடு
> நாளம் ஆகி நாட்கள் நகர்த்தியது.
> வெளியே
> செடியாய் மரமாய் கிளையாய்
> விழுது வீழ்த்தி
> நிலை பெற்றது.
> சிவப்பு ஆலம்பழத்தை
> அந்த பச்சைக்கிளி
> சுவைத்து துப்பிய‌
> கடுகினும் சிறிய விதைக்குள்
> இத்தனை பெரிய ஆரண்ய காண்டம்
> எப்படி நுழைந்தது?
> இது விதையல்ல.
> இது மனிதக்கேள்வி!
> இது பற்றி யெரிந்து வேள்வியானதில்
> கேள்வியும் எரிந்து விடையும் எரிந்து
> சாம்பல் மட்டுமே மிச்சம்.
> எஞ்சி நின்ற நாலு வர்ணத்தில்
> நான்காவதாயும் ஐந்தாவதாயும்
> மனிதன் சேற்றுப்புழுக்களாய்
> நெளியவோ
> இத்தனை அவதாரங்கள் கடவுளுக்கு?
> இந்த மார்கழிப்பனியிலும்
> எரிமலை லாவா
> மனதுக்குள் ஓடுகிறது.
> சங்கரர் தன் உள்ளத்து தீயால்
> சுட்டுக்கொண்டு
> பாடிய வரிகளைப்பாருங்கள்!
>
> “கிம் கங்காம்புனி பிம்பிதே அம்பரமணௌ
> சண்டாலவாடீபயஹ.
> பூரே சாந்தரமஸ்தி காஞ்சன கடீ
> ம்ருத்கும்பயோர்வாம்பரே.
> ப்ரத்யக்வஸ்துனி நிஸ்தரங்க சஹஜானந்தாவ‌
> போதாம் புதௌ.
> விப்ரோஅயம் ச்வபசோயமித்யபி மஹான்
> கோஅயம் விபேதப்ரமஹ.”
>
> இது அவரது மனீஷா பஞ்சகம் எனும்
> மன உறுதிப்பாடல்களில் ஒன்று.
>
> “கங்கை நீரிலும் சண்டாளன் வீட்டு அருகில் உள்ள
> சாக்கடை நீரிலும் பிரதிபலிக்கின்ற சூரியனிடம்
> வேற்றுமை ஏதாவது உண்டா?
> பொன் பாண்டத்திலும் மண் பாண்டத்திலும்
> உள்ள வெளியில்(ஸ்பேஸ்) வேற்றுமை இருக்கிறதா?
> அலையில்லா சுபாவத்தைக் கொண்ட அளவில்லா
> பேரானந்த கடலான உள்ளார்ந்த ஆன்மாவில்
> இவன் பிராமணன்
> இவன் நாய் மாமிசம் உட்கொள்பவன் என்ற‌
> இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம்
> எங்கிருந்து வந்துள்ளது?”
>
> இது சுவாமி ரங்கநாதானந்தரின்
> அருமையான மொழி பெயர்ப்பு.
> இன்னும் அர்ச்சகர் நியமனத்தில்
> நீதியே இர‌ட்டை வேடம் போடுகிறது.
> மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள்
> அடித்துக்கொல்லப்படுகிறார்கள்.
>
> அடித்துக்கொல்லப்படுவது
> ஆதி சங்கரரா?
> இல்லை
> அந்த பிரம்மம் என்னும்
> பரம்பொருளா?
>
> ஆத்மீக பூமியான பாரத‌த்தில்
> எப்படி இப்படி ஒரு
> பாதக நிழல் படர்ந்தது?

News

Read Previous

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

Read Next

சவால்களின் காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *