“இனபேதம் இல்லாத இனிய புத்தாண்டு மலரட்டும்”

Vinkmag ad

“இனபேதம் இல்லாத இனிய புத்தாண்டு மலரட்டும்”
அபிவிருத்தீஸ்வரம்: . நியாஸ் அஹமது. துபாய்.UAE

ஜனநாயகம் நிறைந்த இந்தியத்திருநாட்டில்
ஜாதிக்கலவரம் இல்லாத புத்தாண்டு மலரட்டும்!
சமத்துவம் ஓங்கும் தாய்த்திருநாட்டில்
சகோதரத்துவ உணர்வுடன் வாழூம் புத்தாண்டு மலரட்டும்!

கண்ணியம் நிறைந்த பாரதத்திருநாட்டில்
கலாச்சாரம் குறையாத புத்தாண்டு மலரட்டும்!
காவல்துறை நிறைந்த திருநாட்டில்;;;; பாலியல்
கற்பம+pப்புஇ கொலைகள் நிகம+hத புத்தாண்டு மலரட்டும்!

இந்துஇ முஸ்லிம்இ கிருஸ்துவம் ஒற்றுமையாய் வாழூம் திருநாட்டில்;
இறைஇல்லங்கள் இடிக்கப்படாத புத்தாண்டு மலரட்டும்!
பசுமை நிறைந்த நமது தேசியத்திருநாட்டில்
“பாம்” படுகொலைகள் இல்லாத புத்தாண்டு மலரட்டும்!

பரிணாம வளர்ச்சியில் பட்டங்களை சூடிக்கொள்ளும் திருநாட்டில்
பாசீசக்காவிகளின் படுக்கொலைகள் இல்லாத புத்தாண்டு மலரட்டும்!
விவசாய நெல்வளங்கள் நிறைந்த திருநாட்டில்;;; இந்தியா
விவேகத்துடன் முன்னேற்றம் கானும் புத்தாண்டு மலரட்டும்!

விஞ்ஞான மோகத்தால் வெற்றிக்கண்ட திருநாட்டில்;;; உலகம்
வியக்கும் வண்ணம் புகழ்பாடும் புத்தாண்டு மலரட்டும்!
அரபுநாட்டு தோழராய் திகழும் இந்தியத்திருநாட்டில்
அழகான “பாபர் மசூதி”யை மீண்டும் கட்டிக் கொடுக்கும் புத்தாண்டு மலரட்டும்!

அன்பான முறையில் ஆட்சி நடக்கும் பாரதத்திருநாட்டில்; மக்களுக்கு
அழகிய முறையில் உதவிகள் செய்திடும் புத்தாண்டு மலரட்டும்!
மகிழ்ச்சியோடு மக்கள் வாழும் தேசியத்திருநாட்டில்,
மதவாதம் இல்லாத இனிய புத்தாண்டு மலரட்டும்!

மதவாதத்தை ஆட்சியாக்க முயற்சிக்கும் தாய்த்திருநாட்டில்;;;; மீண்டும்
மதச்சார்பற்ற ஆட்சி அமையும் புத்தாண்டு மலரட்டும்!
புதுசு, புதுசாய் யோசிக்கும் பாரதத்திருநாட்டில்,
புதிய கண்டுபிடிப்புகளை பெற்றுத்தரும் புத்தாண்டு மலரட்டும்!

வல்லரசாக வளர்ந்து வரும் தேசியத்திருநாட்டில்; மக்கள்
வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ளும் புத்தாண்டு மலரட்டும்!
கல்வியை கட்டாய நாட்டுரிமையாக்கிய தாய்த்திருநாட்டில், இதை
காசுக்கு விற்காமல், இலவசமாக தரும் புத்தாண்டு மலரட்டும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~முற்றும்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அபிவிருத்தீஸ்வரம்:
நியாஸ் அஹமது. துபாய்.

+971553637576

News

Read Previous

ஜனாப் செய்யது முஹம்மது வஃபாத்து

Read Next

முதுகுளத்தூரில் கட்டிட மாடிகளின் சுவர்களில் மின் இணைப்பு வயர்கள்: விபத்து அபாயத்தில் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *