ஆண் பெண்

Vinkmag ad

ஆண் பெண்
—————

நாங்கள் எல்லாம் ஆ…ண் பிள்ளைங்கள்.

இந்த நெடிலுக்குள் அடங்கியிர்ப்பது
அதிகாரமா?
அடாவடித்தனமா?
ஆதிக்கமா?
ஆணவமா?
ஆணாக பிறந்துவிட்டோம் எனும் திமிரா?

என்ன இருந்தாலும் நாங்கள் எல்லாம் பெண் பிள்ளைகள்.

இந்த குறிலுக்குள்  அடங்கியிருப்பது
அடிமைத்தனமா?
பேடித்தனமா?
இயலாமையா?
பெண்ணாக பிறந்து விட்டோம் எனும் பேதமையா?

இந்த கேள்விகள் இந்த காலத்தில்  பிறந்தது சரியா?

அப்பாவை வல்லின எழுத்துக்களாலும்
அம்மாவை மெல்லின எழுத்துக்காளாலும்
குறிப்பது தமிழின் குற்றமா?
இல்லை
தமிழை வரைந்தவர் குற்றமா?
இல்லை
இதுதான் வாழ்வின் யதார்த்தமா?

ஆணுக்கு பெண் சரிநிகரா?
இல்லை
ஆண்வேறு பெண் வேறா?

ஆணும் பெண்ணும் சம்ம் இல்லை என்தே
உண்மை.

ஆணது படைப்பில் சில விடயங்களில்
ஆண் பலம் பொருந்தியவணாக இருக்கிறான்.

பெண்ணது படைப்பில் பெண் சில விடயங்களில்
ஆணைவிட பலம் பொருந்தியவளாக இருக்கிறாள்.

சில விடையங்களில் பெண் தனித்துவம் ஆணவள்.
சில விடையங்களில் ஆண் தனித்துவம் ஆணவன்.

உங்கள் குடும்பங்களில் யார் யாரிடம் என்ன என்ன திறமை உள்ளதென இனங்காணுங்கள்.

அதை அதை அவர்கள் பொறுப்பெடுங்கள்.
சிலவற்றை கூட்டாக பொறுப்பெடுங்கள்.

முடிவுகளை மட்டும் கலந்து பேசி முடிவெடுங்கள்.
ஏனெனில்
மனம் திறந்து கலந்து பேசும்போது மேலும் விளக்கங்கள் வெளிவரல்லாம்.
அதனால் முடிவுகள் மேலும் நல்லதாகல்லாம்.
நன்றி.
– ரதி –

News

Read Previous

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா !

Read Next

உலக சகோதரர்கள் தினம்

Leave a Reply

Your email address will not be published.