ஆசிரியர் தினம்

Vinkmag ad
ஆசிரியர் தினம்

அன்னை எனை ஈன்றெடுத்தாள்

 தந்தை எனை படிக்க வைத்தார்
ஆசிரியர் தானே என்
அறிவுக்கண்  திறந்து வைத்தார் .

 

தாய் மொழியைக்  கற்றுத்தந்தார்
பிறமொழியும்  தெரிய வைத்தார்
அறிவியலும் புவியியலும்
கணிதமும் கற்றுத்தந்தார்
ஆற்றலை வளர்த்திடவே
ஆயிரம் வழிகள் சொன்னார் .

மன வளம்  தந்து என்னை
மனிதனாய்  ஆக்கிவைத்தார்
ஒழுக்கமும்  கற்றுத்தந்து
புனிதனாய் ஆக்கிவைத்தார் .

 
தேகப் பயிற்சி தந்தார்
தேச பக்தியும் வளர்த்தார்
 சுற்றுப் புறச் சூழல்
சுத்தமும் கற்றுத் தந்தார்

ஞ்ஞானமும்   இன்றி இருந்த என்னை 
விஞ்ஞானமும்  , உலக
விஷய ஞானமும் – புனித 
மெய்ஞானமும் தந்து
அஞ்ஞானமும்அகற்றி வைத்தார் .
 
ஏணியாய் இருந்தென்னை
சிகரத்தில்  ஏற்றிவிட்டா
ர்
தோணியாய்  அறியாமை
ஆற்றைக் கடக்க வைத்தார் .
மா நிலம் போற்றுகின்ற
ஞாநியாய்  ஆக்கி வைத்தார்

புவியெலாம் புரிய வைத்தா
ர் – கற்றோர் 
அவையெலாம் அறிய வைத்தார்
சிவிகையில்  அமர வைத்தார் – கரம்  

குவித்து நான்   வணங்குகின்றேன் .

தடமறியாதிருந்த என்னைத்   தணலில் 
புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்க வைத்தார்
குடத்திலிருந்த விளக்காய் இருந்த என்னை – உயர் 
குன்றிலிட்ட விளக்காய் ஒளிரவைத்தார் .

பள்ளி   எனும் ஆலயத்தில்
கல்வி எனும் விளக்கேற்றி

அறியாமை இருளகற்றும்
ஆசிரியர் தெய்வமன்றோ .

விதையாய் இருக்கும்  என்னை
விருட்சமாய்  வளர வைக்கும்
குருவாக  விளங்குவோரை
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் .

News

Read Previous

குருவுக்கு வணக்கம்

Read Next

அமீரகம் – துபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *