திறந்தவெளி பல்கலைக்கழகங்கள்

Vinkmag ad

திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் (Open University)

பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் பிற்காலத்தில் டிகிரி (பட்ட படிப்பு) படிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக உருவாக்கப்பட்டது தான் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் (Open University).

தமிழ்நாடு அரசு திறந்தவெளி பல்கலை கழகம் (TNOU – https://tnou.ac.in/) தமிழ் மற்றும், ஆங்கில வழியில் பட்ட படிப்புகளை வழங்குகின்றது.

மத்திய அரசின் IGNOU (http://ignou.ac.in/) பல்கலை கழகம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பட்ட படிப்புகளை வழங்குகின்றது.

முறையான கல்வி தகுதி இல்லாவிட்டாலும், கல்வி அறிவு மட்டும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும், எந்த வயதிலும் டிகிரி (பட்ட படிப்பு) படிக்க முடியும் என்ற நிலையை இந்த திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் (Open University) ஏற்படுத்தியது. மத்திய அரசின் UGC 2018-ஆம் ஆண்டு கொண்டு வந்த விதியால் தற்போது நிலைமை மாறிவிட்டது. +2 படித்திருந்தால் மட்டுமே தற்போது திறந்தவெளி பல்கலைக்கழகத்திலும் பட்ட படிப்பு படிக்க முடியும்.

பழைய நடைமுறை மிகவும் எளிமையானது. நீங்கள் 2-ஆம் வகுப்பு படித்து இருந்தாலும் BPP என்ற தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் நேரடியாக டிகிரி (பட்ட படிப்பு) படிக்க முடியும். UGC-ன் அறிவிப்பு அதை மாறிவிட்டது. எனவே பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் முதலில் +2 வரை தொலை தூர கல்வி மூலம் படித்து தேர்ச்சி பெற்று பின்னர் தான் பட்ட படிப்பில் சேர முடியும். அதற்க்கான வழிமுறையை பார்ப்போம்.

தமிழக அரசு மூலம் பள்ளி கல்வியை Distance-ல் படிப்பது :

தமிழகத்தில் +2 படிக்க, +1 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், +1 படிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு படிக்க 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் பட்ட படிப்பு படிக்க விரும்பினால் முதலில் 8-ஆம் வகுப்பு தேர்வு தனித் தேர்வாளராக (Private candidate) எழுத வேண்டும். அதாவது வீட்டிலிருந்தே படித்து கொள்ளலாம், தேர்வை மட்டும் அருகில் உள்ள பள்ளில் எழுத வேண்டும். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உடன், 10-ஆம் வகுப்பு, பின்னர் 11-ஆம் வகுப்பு பின்னர் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதன் பின்னர் எந்த பல்கலை கழகத்திலும் பட்ட படிப்பிற்க்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் NIOS மூலம் பள்ளி கல்வியை Distance-ல் படிப்பது :

NIOS-ல் +2 படிக்க 10-ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு படிக்க 8-ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது “எனக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் அளவிற்க்கு கல்வி அறிவு உள்ளது” என சுய சான்றிதழ் (self-certificate) அளித்தால் போதும்.

எனவே பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் பட்ட படிப்பு படிக்க விரும்பினால் NIOS-மூலம் படிப்பது சிறந்தது. 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு என இரண்டு வகுப்புகள் தான். பின்னர் டிகிரி (பட்ட படிப்பு) சேர்ந்துவிடலாம். தமிழக பள்ளி கல்வி துறையில் 8,10,11,12 என நான்கு வகுப்புகள் படிக்க வேண்டும்.

மிக முக்கியமான விஷயம். நீங்கள் +2 தேர்ச்சி பெற்றுவிட்டால் திறந்தவெளி பல்கலை கழகத்தில் பட்ட படிப்பு படிக்க வேண்டிய அவசியம் இல்லை. சென்னை பல்கலை கழகம் போன்ற பல்கலை கழகங்களில் பட்ட படிப்பை தொலை தூர கல்வியின் (Distance education) மூலம் படிக்கலாம். தொலை தூர கல்வி (Distance education) பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நமது https://www.facebook.com/wisdomkalvi பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

தகவல் சேகரிப்பு : சகோ. முஹம்மது தாஹா
எழுத்தாக்கம் : S. சித்தீக் M.Tech

News

Read Previous

வீட்டில் …

Read Next

புல்லாங்குழலே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *