பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் விதம் இதுதானா?

Vinkmag ad

பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் விதம் இதுதானா?

 

பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பாஜ/க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜை நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய அவர்பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

உ.பி. மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த  இளம் பெண் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூர நிகழ்வினை பாஜக தலைமையிலான உ.பி.மாநில அரசு எந்தளவுக்கு மோசமாக கையாண்டது என்பதைக் கண்டு உலகமே அதிர்ச்சியடைந்தது. அந்த பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுகூட மறுக்கப்பட்ட கொடுமை நடந்தது. அந்த பெண் உயிரிழந்த நிலையில் இரவோடு இரவாக உ.பி. மாநில போலீசாரால்அவரது பெற்றோரை வீட்டுக் காவலில் வைத்துவிட்டு சடத்தை எரித்த கொடூரமும் நடந்தது. உயர் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் வீட்டின் முன்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இந்த அவமானகரமான நிகழ்வுகள் அனைத்தின் பின்னணியிலும் பாஜக இருந்தது. நாட்டின் பிரதமர் இந்த அக்கிரமத்தை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதுதான் அவர் பெண்களை மதிக்கும் லட்சணமா?

 

காஷ்மீரில் பிஞ்சுக் குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் பாஜகவினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினர். பெண்கள் சக்தியின் வடிவம் என்று இப்போது பேசும் பிரதமர் மோடி நாட்டின்பல்வேறு பகுதிகளில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கொடூரங்களின்போது பெரும்பாலும் மவுன சாட்சியாகவே இருந்து வருகிறார். பெண்களின் பாதுகாப்பை வெறும் வாய்ப்பந்தல் மட்டுமே உறுதி செய்துவிடாது.

 

இது ஒருபுறமிருக்கபெண்களுக்கு அதிகாரம் வழங்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறுவதிலாவது உண்மை உண்டாஎத்தனையோ மக்கள் விரோத சட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றும் மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டது உண்டா?அந்த மசோதா பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் விதம் இதுதானா?

-அக்டோபர் 24 தீக்கதிர் தலையங்கத்திலிருந்து

News

Read Previous

MAM ஆயிஷா ஷா மில்

Read Next

அறிவு சார் அற்புத தகவல்கள் சில!

Leave a Reply

Your email address will not be published.