ஃபேஸ்புக் – குழந்தைகளின் நினைவாற்றலுக்கு எதிரி!

Vinkmag ad

தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தில் உலவும் சிறார்களின் ஞாபகச் சக்தி குறைப்பாடுகள் ஏற்படும், தீவிர மன அழுத்தம் ஏற்படும் சிலருக்கு தற்கொலை மனப்பான்மை கூட அதிகரிக்கும் என்கிறது அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆய்வு.

கனடாவில் உள்ள ஒட்டாவா பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் ஹூக்ஸ் சம்பாஸா கன்யிங்கா மற்றும் ரொசமண்ட் லூயி இருவரும் இந்த ஆராய்ச்சியில் இறங்கினார். இணைய தளங்களில் பதின் வயதுக்குழந்தைகள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்று ஆராய்ந்தார்கள். ஏழாம் கிரெடுகளிலிருந்து பனிரெண்டாம் கிரேடு வரையிலான மாணவர்களை அவர்கள் கவனித்தார்கள். கிட்டத்தட்ட 25 சதவிகிதத்தினர் தினமும் இரண்டு மணி நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்தனர்.

சிலருக்கு இது பிரச்னைகளை தீர்க்கவும், சிலருக்கு பிரச்னையை உருவாக்கும் தளமாகவும் இருப்பது உண்மை. பதின் வயதினர் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் இருப்பதால் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய சமூக, பொது நல விஷயங்களை சொல்ல எளிதாக அவர்களை அணுகக் கூடிய தளமாக இது உள்ளது சிறப்பு என்கிறார்கள்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எத்தகைய பயனுள்ள தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி அதற்கு அடிமையாகிவிட்டால், அதனுள் வீழ்ந்து கிடந்தால் மற்ற எல்லா விஷயங்களும் பாதிப்படையும், காலப்போக்கில் நினைவாற்றல் குறைந்துவிடும் என்பதே இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து

News

Read Previous

“ஹஜ் வழிகாட்டுதல்” நிகழ்ச்சி

Read Next

வீடுகளில் புற்றுநோயை வளர்க்கிறோமா?

Leave a Reply

Your email address will not be published.