கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும்

Vinkmag ad

 

கடாலாடிக்  கரை சேர்ந்து துறை  கண்ட தமிழர்  வாழ்வும் மொழியும்.

 

 

பட்டினம் என்பது என்ன  ?

பட்டினம் என்பது நம் தமிழில் கடல் சார்ந்த இடங்களையே பெரிதும் குறிக்கும். நாகைப்பட்டினம், விசாகப்பட்டினம், கொற்கைப்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், மாதரசன்பட்டினம்,  முத்துப்பட்டினம், ன்று இன்னும் பல. நமது தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை கூறுவதும் விளக்குவதும் அதுதான்.
“கெட்டும் பட்டினம் சேர்” என்ற பழய பழ மொழி வந்தது எதனால்?
 பட்டினப்பாலையில் துறைமுகம் சார்ந்த தொழில்களும் வேலைவாய்ப்புகளும் மிக அதிகம். அது நம் தமிழர் பறந்து விரிந்த உலகத்தாருடன் கொண்ட கடல் வாணிபத்தொடர்பின் வழி வந்த முது மொழி தான் “கெட்டும் பட்டினம் சேர் ” என்பது.

 

unnamed (3)

 

 

துறையும் கரையும் என்ன ? 

 

துறை என்பது நீர் நிலைக்கும் நிலத்திற்கும் இடைப்பட்ட, ஆனால் கரை என்று சொல்ல முடியாத, திருத்தமாகவும், செப்பமாகவும் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதாவது நீரும் அது தழுவி ஓடும் நிலமும் அந்த நிலத்தில் உள்ள தொடு நிலமுமே கரை எனப்படுவது. ஆக கரை மட்டும் அல்லாது அதனை உறுதியாக மக்கள் புழங்க செப்பம் செய்யப்படுவதே துறை.  இன்றும்  பல்கலைக் கழகங்களில், கலூரிகளில்  துறை  எனப்படுவது  ஒரு இயல் சார்ந்த  கல்வியினை  மாணவர்களுக்கு  தெளிவுறச் செய்து  கரை சேர்ப்பதற்கான  செப்பம்  செய்யப்பட்ட  இடமாதலினால் துறை  எனப்பட்டது. அதன் அடிப்படையிலேயே –  அவர் கற்றுத்  துறை போனவர்  என்ற  சொல்லாடலும் வந்தது. 

 இதனால்தான்  கோவில்களில்  உள்ள திருக் குளத்தில் படிக்கட்டுகளை – படித்துறை  என்று  அழைக்கின்றனர். அதாவது  நிலைப்பட்ட  நீர்  நிலையினில் இறங்கி  நீராடிவிட்டு  திடமான படிக் கட்டுகளில் ஏறி வரும் பொழுது அதனைப்  படித்துறை  என்பது வழக்கு. கோவில்களுக்கு படித்துறை செய்து வைத்தவர்கள் தங்கள் பெயரையும் படித்துறை அமைத்த  காரணத்தையும் கல்வெட்டுக்கள் இன்றும் சான்று கூறுகின்றன. 

 

 

 

 

 

 

 

 

 

மயிலாடுதுறை,  திருவாவடுதுறை,  ஆடுதுறை, கூடுதுறை, மலைநாட்டில் ( தற்போதைய கேரளம்) இன்று வழங்கப்படும் “திருபுநிதுரா” அதாகப்பட்டது முன்னர் திருப்பணித்துறை என்ற ஊரினையே இப்போது இவ்வாறு வழக்கில் உள்ளது. சரி இவ்வாறான துறைகளெல்லாம் மக்கள் புழக்கத்தில் இருந்த வாழ்விடங்களே.

சைவ சமயத்தில் பல அடியார்கள் மயிலாடுதுறை, திருவாவடுதுறை என்று துறை தேடிச்சென்றனர், துறை தெரியாமல் சென்றவர்தான் திருநாவுக்கரசர். அதாவது அவர் விரும்பிச்சென்றது கயிலை. 

அன்புடன்,
காசி விசுவநாதன்.
 ” வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு “

 

News

Read Previous

துங்கு ஜமான் மைத்துனருக்கு ஆண் குழந்தை

Read Next

ஆலமரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *