ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் 25 ஆண்டு துயரம்…

Vinkmag ad

ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் 25 ஆண்டு துயரம்…

 

25 ஆண்டுகளுக்கு முன்பு……

சரியாகச் சொல்வதானால் 1990-ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 25 முதல் 31-ம் தேதி வரை—  –

ஏழே நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொத்து, சுகம், தொழில், வேலை, வீடு,வாசல் என அனைத்தையும் இழந்து உடுத்த உடையோடு சொந்த இருப்பிடங்களை, ஊர்களை விட்டுவிரட்டியடிக்கப்பட்டு இன்றுவரையிலும் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத அவலம் 25 ஆண்டுகள்ஆகியும் இன்னமும் நீடிக்கிறது.

1990அக்டோபர் 25-ம் தேதி மன்னாரில் தொடங்கி வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்தொடர்ந்து 31-ம் தேதி யாழ்ப்பாணத்தில் முடிவடைந்த இந்த விரட்டியடிப்பு நிகழ்ச்சி  இலங்கைஅத்தியாயத்தில் மறைக்க முடியாத கரும் புள்ளி.

இலங்கையின் வட மாகாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள், தனித்தமிழ் ஈழத்திற்காக போராடுகிறோம்என்ற பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட விடுதலைப்புலிகளால் எந்த ஒரு காரணமும்இல்லாமல் இரண்டே மணி நேர அவகாசத்தில்  விரட்டியடிக்கப்பட்டனர். அதாவது தமிழர்களைதமிழர்க«s விரட்டியடித்த கொடுரம் அரங்கேறியது.

அப்படி விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து பணம், நகை என அனைத்தும் பறிக்கப்பட்டு ஒரேஒரு பையில் துணிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு கடல் மார்க்கமாக மரக்கலங்களிலும்,  தரைமார்க்கமாக வாகனங்களிலும் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

“மனசாட்சியுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தை காயப்படுத்திய அந்த கோர நிகழ்வே தமிழ் ஈழவிடுதலைப்புலி களின் அழிவின் தொடக்கம்” என செ. குணராசா தனது ‘மரணத்தின் தேசம்‘ என்றநாவலில் பதிவு செய்தது இங்கு நினைவுகூறத்தக்கது.

வடபுலத்திலிருந்து விரட்டப்பட்ட தமிழ் பேசும் முஸ்லிம்கள் தென் இலங்கையின் புத்தளம், அனுராதபுரம்,குருனாக்கள், பானந்துறை, நீர்க்கொழும்பு ஆகிய மாவட்டங்களில்  பிரேமதாசா தலைமையிலான ஐக்கியதேசிய கட்சி ஆட்சியின் போது,  அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர்.

2009 மே மாதம் 18-ம் தேதி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இலங்கை இறுதிப் போரையடுத்து வடமாகாணத்தில் அமைதி நிலை தோன்றியுள்ள போதிலும் அகதிகளாக வாழும் இந்த முஸ்லிம்கள்  சொந்தஇடங்களுக்கு திரும்ப முடியவில்லை.

தமிழர்களின் விரோதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்சே அதிபராகஇருந்தபோது, இந்த மீள் குடியேற்றத்துக்கு எந்த ஆர்வமும், அக்கறையும் காட்டவில்லை என்பதை கூட பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால், வட மாகாணத்தில் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் தேசியகூட்டமைப்பின் ஆட்சி அமைந்ததற்கு பிறகும்கூட இதற்கு ஒரு  அக்கறையும்  காட்டப்படவில்லைஎன்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் சுமார் 5 சதவீத முஸ்லிம்கள் மீள்குடியேறமுயற்சித்த போது, தமிழ் அமைப்புகள் அதற்கு எதிராகவே செயல்பட்டன என்பதே இலங்கைமுஸ்லிம்களின் இன்றைய வேதனை.

முஸ்லிம்கள் இலங்கை வடபுலத்திலிருந்து விரட்டப்பட்ட 25-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  மன்னார்சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு மவ்லவி ரிஸ்வி முப்திதலைமையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஏற்பாடு செய்து வருகிறது.

இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒருசேர இணைத்து, இலங்கைஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டில், இலங்கைஅமைச்சர்கள் ரவூஃப் ஹக்கீம், ரிஸாத் பதியுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் வெளிவந்துள்ள ஒரு நூல் 25 ஆண்டுகளுக்கு முந்தைய வெளியேற்றசம்பவங்களையும், இன்றைய நிகழ்வுகளையும் தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டி கண்ணீரைவரவழைத்துள்ளது.

“வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்” என்ற இந்த நூலை எழுதியிருப்பவர்

சுஐப் எம். காஸிம் என்பவர் ஆவார்.  1990 அக்டோபரில் விடுதலைப்புலிகளால்வெளியேற்றப்பட்டவர்களில்  இவரும் ஒருவர். அப்போது அவருக்கு வயது 17.  இவரது தந்தை வி.எம்.காஸிம் தலைசிறந்த மரபுக் கவிஞர்.  இவர்களின் பிறப்பிடம் மன்னார்விடத்தல் தீவு.

தமது தந்தை,  தாய், 14 வயது சகோதரி, தமக்கு கல்வி கற்றுத் தந்த கல்விச்சாலை அதிபர் எனஅனைவருடனும் உடுத்த துணிகளோடு வெளியேறிய இவர்கள் புத்தளம் அகதி முகாமில்தங்கவைக்கப்பட்டனர். அங்கிருந்தபடியே படித்து முரட்டுவை பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பபொறியாளராக பட்டம் பெற்றும், தன்னோடு புலம் பெயர்ந்த அகதிகளின் அவலம் உலகிற்கு தெரியவேண்டும், அவர்களுக்கு சொந்த இருப்பிடம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பத்திரிகையாளராகிதினகரன் வார இதழில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறார்.  இப்போது

சுஐப் எம். காஸிமுக்கு வயது 42.  இவரது மனைவி சட்டத்தரணி.

“எனது புதல்வர் சிங்கள வழியில் கல்வி பயில்கிறார், நாங்கள் சொந்த ஊரில் இருந்திருந்தால்  தமிழ்வழியில் தானே கல்வி கற்றிருப்போம், இந்த பாவத்திற்கு விடுதலைப்புலிகள் தானே காரணம்” என்கிறார்

சுஐப் எம். காஸிம்.

கொழும்பில் தபால் தலைமையக கேட்போர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்நூல் வெளியீட்டுவிழாவில் இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேர்மன் பஷீர் ஷேக்தாவூத் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

“கண்ணீரும் கம்பலையுமாக காலம் தள்ளும் ஒரு சமூகக் குழுமம் தமது பிறந்தகத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட துயர வரலாற்றை உணர்ச்சிபூர்வமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல்.  வட மாகாணமுஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்  புலிகளின் இறுதித்தருணத்தில்  வெறும் துயர் நிகழ்வாகவேசுருக்கப்பட்டது. ஆனால் அந்தத் துயரத்தின் அடர்த்தியை, அழுத்தத்தை, வருத்தங்களை வலியைஉணர்ந்திருக்க வாய்ப்பில்லை. தமது தாயகத்திலிருந்து வேரோடு பிடுங்கி வீசப்பட்ட ஒரு சமூகத்தின்அவலங்களை  இந்நூல் படம் பிடித்து பேசுகிறது” என பதிவு செய்கின்றனர் புலம் பெயர்ந்தோர்.

அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஸாத் பதியுத்தீன்  இலங்கை மீள்குடியேற்ற அமைச்சராகஇருந்த போது, வடபுலத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களை மீள்குடியேற்றம்  செய்ய முயற்சிகள் பலமேற்கொண்டார்.  அரசியல் காரணங்களுக்காக அவரது இலாகா மாற்றப்பட்டு விட்டது. தற்போதுநடைபெற்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசு அமைத்துள்ளன.  பிரதமர் ரணில்விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த தமிழரான டி.எம். சுவாமிநாதன் மீள்

குடியேற்ற  கேபினட் அமைச்சராகவும், அதிபர் மைத்ரி சிறிசேனாதலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திராகட்சியைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ் அந்த துறையின் இணை அமைச்சராக வும் பொறுப்பு வகிக்கின்றனர்.இந்த கால கட்டத்திலாவது விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற முயற்சிக்கப்படுமா என்பதேஅகதிகளாக வாழும் முஸ்லிம்களின் ஏக்கம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு இலங்கை போர் குற்றம் தொடர்பாக சொல்கிறதேதவிர,  விரட்டப்பட்டோரின் கதி பற்றி வாய் திறக்கவில்லையே என குமுறுகின்றனர் இலங்கைமுஸ்லிம்கள்.

ஐ.நா. சபையின் அமைப்புகள் கூட 1990-ல் விரட்டப்பட்டவர்களை பழைய அகதிகள் என்றும், இறுதிக்கட்டபோரில் புலம் பெயர்ந்தவர்களை புதிய அகதிகள் என்றும் பிரித்து புதிய அகதிகளுக்கு காட்டும் சலுகைஎதுவொன்றையும்கூட பழைய அகதிகளுக்கு தருவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுகின்றஇலங்கை வட மாகாண சபை, விரட்டப்பட்ட முஸ்லிம்கள் குறித்து வாய் திறக்க மறுப்பதேன்? என்கின்றஅவர்களின் கேள்வி முற்றிலும் நியாயமானதே!

தமிழ்நாட்டிலும், தமிழ் தேசிய அமைப்புகள் விரட்டப் பட்ட முஸ்லிம்கள் குறித்து மவுனம் சாதிக்கின்றனஎன்பதே உண்மை. தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் பல தங்களை அரசியல் அரங்கில்நிலை நாட்டிக் கொள்வதற் காக இலங்கை இறுதிக் கட்ட போர் பிரச்சனையை கையிலெடுத்துபோராடுகின்ற போதும், இலங்கை முஸ்லிம் அகதிகள் குறித்து பேச மறுக்கின்றன.

இலங்கை முஸ்லிம் அகதிகள் குறித்து பேசும் ஒரே அரசியல் இயக்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே. அதன் தலைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன்அவர்கள்தான்.  விரட்டப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீண்டும் மறுவாழ்வு வாழமுயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடர்ந்து முழங்கி வருகிறார்.

வடபுல முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 25 ஆண்டுகளாகியுள்ள இந்த சமயத்தில் தமிழகம் வருகை தந்தஇலங்கை அமைச்சர் மாண்புமிகு ரவூஃப் ஹக்கீம் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். அப்துல்  ரஹ்மான் அவர்கள் சந்தித்தபோது கூட இலங்கைமுஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பற்றிய கவலையையே பகிர்ந்து கொண்டனர்.

25 ஆண்டுகளாக சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கை முஸ்லிம்களின் அழுகுரல் விழவேண்டியவர்களின் காதுகளில் விழுமா? அவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?

–  KAYAL MAHABOOB

NEWS EDITOR,

MANICHUDAR TAMIL DAILY,CHENNAI

Mobile :+91 9003228833 / +91 9790740787

E-Mail: kayalmahaboob1955@gmail.com

Facebook- https://www.facebook.com/kayalmahaboob

News

Read Previous

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

Read Next

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை

Leave a Reply

Your email address will not be published.