வீடுகளில் மரம் மாத்திரமல்ல… அறமும் வளர்ப்போம்

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
—————————————-
வீடுகளில் மரம் மாத்திரமல்ல…
அறமும் வளர்ப்போம்
——————————————————-
எம்மதத்தைச் சார்ந்த மக்களாக
இருந்தாலும்,குழந்தைப் பருவத்தில்
இருந்தே அவர்கள் அறமோடு, நல்ல
பழக்க வழக்கங்களோடு, பண்போடு
வளர்க்கப்பட வேண்டும். வீட்டில் அறம்
வளர்ந்தால் வீதியில் அறம் வளரும்.
வீதியில் அறம் வளர்ந்தால் நாட்டில் அறம்
வளரும். நாட்டில் அறம் வளர்ந்தால் அந்த
நாடு மத சார்பற்ற ஜன நாயக நாடாகத்
திகழும். இ்ல்லை என்றால் எந்த நாடும்
விலங்குகளின் கூடாராகமாகத்தான்
மாறும்.

வீட்டில் அவரவர் மதம் சார்ந்த வேத
புராணங்களை மட்டும் தம் மக்களுக்கு கற்பித்தால் போதாது.மனித நேயம்,மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை இவை
களும் நம் மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். பிற சமய மக்களுடன் பழகும் விதங்களும் கற்பிக்கப்பட வேண்டும்.

மேலே ஒரு வீடியோ பதிவு காட்சி.
சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களின்
ஆத்மார்த்த, உள்ளத்தின் அடித் தளத்தில்
இருந்து வந்த அந்த பதிவு நம் நெஞ்சை
ஈர்க்கிறது. சகோதரி பாரதி பாஸ்கர்
போன்ற படித்தவர்கள், பண்பாளர்கள் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள்,மனிதத்
தை மிகவும் நேசிக்கக் கூடியவர்கள்,
உண்மையை யாருக்கும் அஞ்சாமல்
எடுத்துரைக்க கூடிய நன் மக்கள்,இது
போன்ற செய்திகளை பொது மக்கள் மத்தியில் மனந் திறந்து மேடைகள்
தோறும் தொடராக முழங்கினால்
மாத்திரமே நாடு நன்கு சுபிட்சம் பெறும்,
மனிதம் வளரும். மதவெறி மாயும்.

வீடியோ உதவி சகோதரர்
முஹம்மது ஷரீப். நன்றி

ஏ.ஆா்.தாஹா(ART)22-09-2019
மறு பதிவு : 02-07-2020

News

Read Previous

சாபி மதமும் அனபி மதமும்

Read Next

மத்திய அரசுக்குப் பிடிக்காத திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *