மாறிவரும் மதுரை

Vinkmag ad
maduraiமதுரை தெப்பக்குளம் உயரம் 15 அடி, 305 அடி அகலம் கொண்டவை.

தெப்பக்குளம் மிக தேர்ந்த வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. குளத்தின் ஒரு புறம் வைகை மிக அருகே இருப்பதால் ஆற்றில் நீர் வரும் சமயம் தானாகவே தண்ணீர் நிரம்பும் வழியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது, ஆற்றின் மட்டமும் சுரங்க பாதையின் மட்டமும் ஒரே உயரமாக. மறுபுறம் அனுப்பானடி, சிந்தாமணி, உள்ளது நீர் பாசனத்திற்க்கு வரும் தண்ணீரில் உபரி நீர் மற்றும் அவசியத்தேவையின் பொருட்டு நீர் நிரப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மிக கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்த உபரி நீர் வந்து தெப்பக்குளத்தை நிரப்ப பல நாள் ஆகும், மதுரையின் கிழக்குப்புறம் எல்லையாக அமைந்துள்ளதால் அவசர காலத்தில் இதை சுரங்கப்பாதையாக உபயோகித்து இருக்கலாம்.
திருமலை நாயக்கர் மகால் கட்டப்பட்டதற்க்கு மண் தோண்டுவதற்காக எடுக்கப்பட்ட பள்ளமே இப்போது குளமாக உள்ளது.

பள்ளம் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரே இப்போது மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் முக்குறுணி பிள்ளையார்.

மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்த போது அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர் பாண்டியமன்னர் ஆட்சிகாலத்தில்(கூன்பாண்டியன் என்று கூறுகின்றனர்). அப்போது மன்னர் அவர்களை விரட்டி வைகை ஆற்றங்கரையில் கிடைத்த அம்மன் சிலையை நிறுவி வழிபட்டார் என்கிறது தெப்பக்குளம் மாரியம்மன் வரலாறு.

ஆரம்ப காலத்தில் காளிதேவியாக வணங்கப்பட்டது, கிழக்கு எல்லையில் கோயில் கட்டப்பட்டது. அப்போது  “துர்க்கை’யாக எண்ணி வணங்கினர். “துர்க்கம்’ என்றால், “கோட்டை’ என்று பொருள். அதாவது மதுரையின் எல்லையில் கோட்டை போல இருந்து மக்களை காப்பவள் என்ற பொருளில் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.

மன்னர்கள், போருக்கு செல்லும் முன்புவீரத்துடன் செயல்படவும், வெற்றி பெறவும், பிற்காலத்தில் நாட்டில் மழை பொய்த்த போது, மன்னர்கள் மழை வேண்டி பூஜைகள் செய்து வணங்கியதால். மாரி தரும் தெய்வமாக வணங்கப்படுபவள் மாரியம்மன். துர்க்கையாக இருந்தாலும், மழை பெற வேண்டி வணங்கப்பட்டதால் இவளுக்கு, “மாரியம்மன்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. இவ்வாறு காளிதேவியாகவும், துர்க்கையாகவும் வழிபடப்பட்ட அம்பிகை இத்தலத்தில் “மாரியம்மனாக’ தற்போது வணங்கப்படுகிறாள்.

பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் இருக்கிறது.

படித்தும் கேட்டும் எழுதியவை.
C.M உதயன் <udhayan.chn@gmail.com>

News

Read Previous

விவசாயிகள் கவனத்திற்கு

Read Next

செல்போனில் வேளாண் செய்திகள்: இணை இயக்குநர் தகவல்

Leave a Reply

Your email address will not be published.