மன்னிப்போம், மறப்போம்

Vinkmag ad

“மன்னிப்போம், மறப்போம்.”
……………………………………..

மன்னிக்கும் தன்மை நம்மிடம் தன்னம்பிக்கையை, அதிகரிக்கச் செய்து நம் ஆளுமையை வளப்படுத்து கிறது.

பகைமையை மறந்து, நட்புறவை வளர்ப்பதன் மூலம் அன்பு நிலை நாட்டப்படுகிறது.

உறவுகள் மலர்கிறது. பழிவாங்கும் எண்ணம், கோபம், வெறுப்பு ஆகிய தன்மைகளுடன் வாழ்ந்தால்,அவை நம்மை ஆள்கின்றது., ஆட்டுவிக்கின்றது.

மன்னிக்கும் மாண்புடன்,தீமை செய்தவருக்கும் நாம் நன்மை செய்தால் நாம் நம் உணர்வுகளை ஆட்சி செய்வோம்.

‘பான்கெய் என்ற ஜென் ஆசிரியர் தன் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கே ஒரு அர்ச்சகர் வந்தார். உள்ளூர் கோவிலில் வழிபாடு நடத்தும் அர்ச்சகர்.. அவருக்கு. புத்தர் மீதோ, ஜென் தத்துவங்கள் மீதோ அவருக்கு நம்பிக்கை இருந்தது இல்லை.

ஆகவே, அவர் புத்தரை இழிவு படுத்திப் பேசினார்.ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.

பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை.

ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் ஜென் அமைதியாக.

எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்து இருக்கிறது,தெரியுமா?’ என்று கேட்டார் அந்த அர்ச்சகர்..

தெரியவில்லை, சொல்லுங்கள்..அறிந்து கொள்கிறேன் என்றார் ஜென்..

அவர் நீர்மேல் நடப்பார். தீயை அள்ளி,அள்ளி விழுங்குவார்.
அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும். நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!

விபூதி,பூ ,சந்தனம் போன்றவைகளை வரவழைத்துக் காட்டுவார்.என்றார் அந்த அர்ச்சகர்..

இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?’

நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய். ஆனால், எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்ய முடியும்.’

அதென்ன?’என்றார் அர்ச்சகர்..

அமைதியாகச் சொன்னார் பான்கெய்..

யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனதில் வைத்துக் கொள்ளாமல் முழுமையாக மன்னித்து விடுவோம்!

ஆம், நண்பர்களே.,

பொறாமை, ஆசை, கோபம், தீயசொற்கள் எனும் நான்கு கேடுகளை விடுவித்தால் அறம் உருவாகும். அன்பும், பொறுமையும் முகிழ்ந்து அங்கே மறப்போம், மன்னிப்போம் என்ற உன்னதமான பண்பு உருவாகும்.

ஆகவே ,

மன்னிப்போம்,

மறப்போம்,🌺❤

News

Read Previous

குறைவான வயதில் உயர்ந்த பதவி

Read Next

உலக மருத்துவர் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *