உலக மருத்துவர் தினம்

Vinkmag ad
உலக மருத்துவர் தினம் 
மண்ணுயிர்  அனைத்தும் காக்கும்

இன்னரும் சேவை செய்யும்

மகத்துவம் வாய்ந்த புனித

மருத்துவர் தினமாம் இன்று .

மானுட உயிர்கள் மற்றும்

விலங்கின உயிர்கள் கூட

காத்திடும் சிறந்த பணியை

ஆற்றலோடும்  அக்கறையோடும்

ஆற்றிடும் மருத்துவரை

போற்றுதல் நன்றியாகும் .

உயிர்களும் காப்பார்  உடல்

ஊனங்கள் தவிர்க்கச செய்வார்

எதிர் வரும் நோய்கண்டறிந்து

ஏற்றதோர் வழியும் சொல்வார்

ஏழை பணக்காரர்  என்ற

எவ்வித பேதமின்றி

இரவு பகல் என்று
எந்த நேரம் சென்றாலும்

நம்பிக்கை தரும் வகையில்

நல்லதோர் வார்த்தை சொல்லி

தம்மிடம் வந்தவர்க்கு

தக்க மருத்துவம் செய்து

மண்ணிலே அவதரித்த

கண்ணியக் கடவுளாக

என்னிடத் தோன்றும் வண்ணம்
புண்ணிய சேவை செய்யும்

தொழில் தர்மம் தவறாது
தொண்டெனவே நினைக்கும்
மருத்துவர் தம்மை நாமும்
மனதார வாழ்த்திடுவோம்.

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
1.7.2019.

News

Read Previous

மன்னிப்போம், மறப்போம்

Read Next

மரங்களுக்கு உண்டு மறுபிறவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *