மனிதன் பூமியிலிருந்து படைக்கவில்லை-நவீன விஞ்ஞானம்!

Vinkmag ad

மனிதன் பூமியிலிருந்து படைக்கவில்லை-நவீன விஞ்ஞானம்!

(டாக்டர் ஏ. பீ. முகமது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

 

‘களி மண்ணிலிருந்து மனிதப் படைப்பினை துவங்கினான்’ என்றது அல்குரான் 1430 ஆண்டுகளுக்கு முன்பு(32:7)

‘மனிதனை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான் ஏக அல்லாஹ்’ அல் குரான்(35:11)

‘அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதினை மனிதன் அறிய வேண்டாமா’ என்றும் சொல்லியுள்ளது குரானில்(36:77)

காலனி ஆதிக்க ஏகாதிபத்திய இங்கிலாந்தில் தொழில் புரட்சி காலத்தில் உதித்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின்(  1809-1882)   மனிதப் படைப்பினைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து எழுதப்  பட்ட புத்தகம், ‘மனிதப் படைப்பின் ஆரம்பம்'( on the origin of species)

அதனில், ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ என்று நம்பும்படி எழுதியுள்ளார்.

அதற்கு அவர் உதாரணமாக காட்டியது சிம்பனி என்ற மனிதக் குரங்கு மனிதனைப் போல நடவடிக்கைகளில் இருப்பதாலும், சில ஆப்பிரிக்க மக்கள் குரங்குகள் போன்ற முக அமைப்பினையும் கொண்டதாலும் தான். ஆனால் அவரால் ஏன் அந்த மனிதக் குரங்குகளால் பேச முடிவதில்லை என்பதையோ அல்லது இரண்டு கால்கள் கொண்டு மனிதனைப்போல நடமாட  முடியவில்லை என்பதனையே விளக்க முடியவில்லை.

ஆங்கிலேய பகுத்தறிவாளி டாக்கின்ஸ் பித்திலி, ‘நாம் மனிதக் குரங்குகள் போல தோற்றம் இருந்தாலும், நாம் மனிதக் குரங்குகளின் சந்ததிகள் என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை’ என்கிறார்.

இதனையே தான் அல் குரானும் மனிதப் படைப்பான ஆதமையும்-ஹவ்வாவையும் எவ்வாறு படைத்தான் என்று விளக்கமாக கூறுகின்றது.

அதனை உறுதிப் படுத்தும் விதமாக விஞ்ஞானி டாக்டர் கெல்லிஸ் சில்வர், தனது, ‘மனித இனம் தோன்றியது பூமியிலல்ல’ என்ற ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் நிரூபித்துள்ளார்.

இஸ்லாம் வானுலகில் பல கண்டங்கள் உள்ளது என்றும், அதில் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற மலக்குகளும், ஜின்களும் உள்ளன என்று கூறுகின்றது. இதன் மூலம் கோள்களில் வேற்றுக் கிரக வாசிகள் வாழ்வது சாத்தியமே என்று கருத வேண்டியுள்ளது. சமீபத்தில் நாசா விண்கல சோதனை மையத்தின் அருகிலேயே மூன்று அதி நவீன ஒளி கொண்ட உருவ அமைப்புகள் கொண்டவை தெரிந்ததாக தரையில் உள்ள நாசா மையம் தொலைக் காட்சியில் தெரிவித்தது.

அத்தோடு பூமி ஒரு போன்றும் அதனில் மனிதன் தனது ஆரம்பக் காலத்தில் இயற்கை, விலங்குகளோடு போராடி வெற்றியடைய வேண்டியிருந்தது என்றும் கூறுகின்றார், டாக்டர் கெல்லிஸ் சில்வர்.

இஸ்லாத்தில் ஆதம்(அலை) அவர்களை மனிதனின் தந்தையாகவும், ஹவ்வா (அலை) அவர்களை  தாயாகவும் கருதப் படுகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் பூமியிலுள்ள ஒரு பிடி மண்ணை எடுத்து வர மலக்கு மார்களிடம் கட்டளையிட்டு, பல மலக்குகள் மலைத்த போது ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மட்டும் பூமியின் பல்வேறு இடங்களில், பலவிதமான மண்களை சேகரித்து ஒரு பிடி மண்ணினை இறைவனிடம் கொடுத்து, அதனை இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்தான். அதனால் தான் ஆதம் அவர்களின் சந்ததி மனிதர்கள் பல நிறத்தில் இருக்கின்றார்கள் என்ற கூற்றும் உள்ளது.

News

Read Previous

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

Read Next

பெற்றோர்களுக்கான கதைசொல்லி பயிற்சிப் பட்டறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *