புறம் பேசாதே

Vinkmag ad

குட்டிக்கதை .

புறம் பேசாதே

அந்த முதியவர்
வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர்… பணி ஓய்வு பெற்றவர்… மனைவி இல்லை.. பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் வாழ்கிறார்கள்.

நல்லவர் தான். ஆனால்…. கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்…..!!

மற்றவர்களை எளிதாகக் குறை கூறுபவர்….

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான்.

அவனுக்கு ஆக்டிங் டிரைவர் வேலை.

யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான்.

இவருக்கு அவன் மேல் சந்தேகம்…..!!

திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்……!!

காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்…..

சில நாட்களில் மாலையில் போகிறான் !!

இரவில் வீடு திரும்புகிறான்…..

“ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ?” என நினைத்தார்….!!

இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது ..!!

தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார் …….!!

காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.

‘அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது.

ஒரு கட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

ஆனால், அவன் அப்பாவி, அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும், அவனை விடுவித்து விட்டார்கள்”…..!!

ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது…!!

“நான் என்ன திருடனா”….? “என்னைப் போய் கைது செய்து விட்டார்களே…..!!

எல்லாம் இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது.

அவன், முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதியிடம் முதியவர் சொன்னார் “நான் யாரையும் காயப்படுத்தவில்லை”.

வாய் வார்த்தையாக எதையோ யாரிடமோ சொன்னேன், அவ்வளவு தான்.”

டிரைவரோ, போலீஸால் தான் அலைக்கழிக்கப் பட்டதை, அந்த அவமானத்தால் மனது பாதித்ததை….. எல்லாமே
பெரியவர் புறம் கூறியதால்தான் என்பதை எடுத்துச் சொன்னான்.

நீதிபதிக்கு டிரைவரின் நிலையும், பெரியவரின் வீம்பும் புரிந்தது …..!!

முதியவரை அழைத்து,” நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்…..

உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி….,

அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து….,

போகிற வழியெல்லாம்
ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள்……

நாளைக் காலையில் வாருங்கள்” என்றார்…..!!

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

நீதிபதி
முதியவரை அழைத்தார். “நான் சொன்னது போலச் செய்தீர்களா”…….?

“ஆமாம் ஐயா.”

“நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்”……!!

“அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’…..!!

“அது எப்படி ஐயா முடியும்”….?

“அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும்”……

“அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது”….?

“முடியாதில்லையா”…..

அப்படித் தான்…

” நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை”……!!

“ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை”…..!!

“நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும்”….!!

அப்போது தான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம்”……

உண்மையில்,

புறங்கூறுதல் என்பது ஒரு திருடனை விட மோசமானது”……!!

ஏனென்றால்,

அது ஒரு மனிதனின் மதிப்பு,
மரியாதை, கண்ணியம்,
நல்ல குணம்
அனைத்தையும்களவாடி விடுகிறது.

“அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது”…….

எனவே நீங்கள் குற்றவாளியே
என்று தீர்ப்பளித்தார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்றைய சிந்தனைக்கு

அதிகாரம் : 19 – புறங்கூறாமை

குறள்:184

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்

கலைஞர் உரை:

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

மு.வ. உரை :

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை :

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சண்யம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

Translation:

In presence though unkindly words you speak, say not\r\nIn absence words whose ill result exceeds your thought.

Explanation:

Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

News

Read Previous

கோவை : விடுதிக்கு பெண் வார்டன் தேவை

Read Next

ஜி. யு. போப்

Leave a Reply

Your email address will not be published.