புத்தக வாசிப்பு

Vinkmag ad

நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. டீவீ வந்துவிட்டது மொபைலில் வாட்ஸப் வந்துவிட்டது. கிண்டில் வந்து விட்டது என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.அதற்குக் காரணங்கள் காண்பதோ, இப்படி ஆகிவிட்டதே என்று குறைகள் கூறி ஆதங்கப் படுவதோ நல்ல விளைவுகளைஏற்படுத்தப்போவதில்லை.

சிறுவயதிலிருந்தே இருந்தே அந்த வழக்கத்தைத தொடங்க வேண்டும். என்ன செய்து எப்படி புத்தக வாசிப்பைவளர்க்கலாம் என்று தாங்கள் மிக சுருக்கமாக ஒரு சில விடைகளில் வழிகாட்டல் தாருங்கள். தாங்கள் வாராவாரமோ அன்றாடமோ வாசிக்கும் நேரமும் குறித்து அனுப்பினால் பிறரை ஊக்கப்படுத்த உதவும்.தங்கள் அரிய நேரத்தில் தரும் இத்தொல்லைக்கு வருந்துகிறேன். ஏதாவது யாராவது செய்யா விட்டால் புத்தகப்படிப்பே அனாவசியம் என்ற போக்கு வளரும். அந்த போக்கு புத்தகம் வாசிக்கிற நேரத்தை தீய மற்றும் உதவாத வீண் காரியங்களில் விரயம் செய்யும் வழக்கத்தை தடுக்கும்

இந்தப்பின்னணியில் சிந்திக்கவும்.

 

வாசிப்பது என்றாலே பாடம் தொடர்புடையதுதான் என்பது போன்ற எண்ணமே இன்றைய இளம் சமூகத்திடம் பரவலாக இருக்கிறது. அதை உடைத்தெறிவது எப்படி? ஒருவரை மலையேற வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது பொதுவான புத்தகம் படிக்க வைப்பது. மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்குப் படிக்கவேண்டும்? புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!

 

புத்தகம் வாசிப்பது இன்றைய கால கட்டத்தில் …ஒரு போக்கத்தவன் செய்யும் செயலாக சமுகத்தில் மதிக்கப்படுகிறது. தொலைக்காட்சி, இணையதளம் போன்றவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதே இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் வாசிக்கும்  பழக்கத்தை குழந்தை பருவத்தில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அம்புலிமாமா, கோகுலம், கடந்து விகடன்,குமுதம் வாசித்து சுஜாதா, ராஜேந்திரகுமார் படித்து பின் கல்கி, சாண்டில்யன் கடந்து அகிலன், ஜெயகாந்தன் முடித்து இன்றைய கற்றாழை, காவல்கோட்டம் உட்பட படிக்கும் தலைமுறை இனியும இதைப்போன்ற வரிசையில் தொடர்கிறதா? குழந்தைப் பத்திரிகைகள் ஏதாவது வருகிறதா என்பதே தெரியவில்லை.

 

இதை எப்படி மாற்றுவது? தாங்கள் ஏதாவது இது குறித்து சிந்தித்ததுண்டா?  இன்றைய மாணவர்களை, இளைஞர்களை எப்படி படிக்க வைப்பது? தங்களுக்கு ஏதாவது யோசனை உண்டா? தாங்கள் தற்போது படித்து வரும் இதழ், நூல் குறித்து தெரிவிக்க முடியுமா? துறை சார்ந்த்தாக இருப்பினும் பதியலாமே? புத்தக வாசிப்பு குறித்த தங்களின் கருத்து என்ன? சுருக்கமாக பதில் தரமுடியுமா?

 

சென்னையில் வெளிவரும் அடையாறு இதழுக்காக புத்தக வாசிப்பு தொடர்பான பேட்டியை வாரந்தோறும் ஒருவருடைய கருத்தாக பதிவு செய்ய உள்ளேன்.  தாங்கள் தகவல் அனுப்பி உதவவும். பணிவன்புடன்

Thanks & regards
Dr.J.Premalatha,
Tamil Professor,
Govt.Arts College,
Salem-7.
9488417411
http://vjpremalatha.blogspot.in
http://salem7artstamil.blogspot.in
https://vjpremalatha.wordpress.com
http://jpremalatha.blogspot.in/

News

Read Previous

எளிய இயற்கை வைத்தியக் குறிப்புகள்

Read Next

இல்லறத்தில் இனிது வாழ்க !

Leave a Reply

Your email address will not be published.