பிடிவாத குணம்…!

Vinkmag ad

‘’பிடிவாத குணம்…!”
…………………………………………

பிடிவாதம் மனநோயா…? என்றால் “இல்லை” என்றும் கூறவியலாது, “ஆம்” என்றும் சொல்ல முடியாது…? அது ஒருவரின் வாழ்க்கைச் சூழலை பொறுத்தே அமைந்தே இருக்கும்…

பிடிவாத குணம் என்பது, ஒரு வலிமையான மனோபவம். தன் பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டுதான் பலமுறை தோற்ற பின்பும், வெற்றியை விரட்டி பிடித்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்…

ஆராய்ச்சிக் கூடமே எரிந்து சாம்பலான நிலையிலும் இரவைப் பகலாக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனும் பிடிவாத குணம்தான் தாமஸ் ஆல்வா எடிசனை,ஆயிரத்து அறுநூறு கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது…

காந்தியின் சத்யாகிரகப் போராட்டம் தோல்வி. அவர் செய்த ஒத்துழையாமை போராட்டம் தோல்வி. இருந்தாலும் அவர் தளரவே இல்லை. போராட்டம் நடத்திக்கொண்டே இருந்தார். ஒரு ஆங்கிலேய அதிகாரி அவரிடம் கேட்டார். “ஏன் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்று..?”

“இது என் தாய் நாடு! இந்த நாட்டிற்காக இந்த நாட்டின் சுகத்திரத்திற்காக நான் பிடிவாதமாக இருப்பதில் தவறில்லை” என்று கூறினார்…

போராட்டம் நடத்தி, நடத்தி குருதி சிந்தி சிந்தியே கடைசியில் அவரும் அவரின் கூட்டாளிகளும் விடுதலை போராட்ட வீரர்களும் மக்களும் சேர்ந்து போராடி பெற்றதே இந்த விடுதலை…

இதன் பின் இருப்பது ஒரு பிடிவாதம்தான்…

சில நேரத்தில் பிடிவாதம் என்பது விபரீதமாக முடிந்து விடும் என்பதற்கும் விடுதலை போராட்டத்தையே எடுத்துக் கொள்வோம்…

முகமது ஜின்னா அவர்கள் முகம்மதியர்களுக்கும் சமஉரிமை கொடுங்கள் என்று கேட்டார். ஜின்னா மீண்டும் மீண்டும் கோரிக்கையை வைத்து கொண்டே இருந்தார். ஆனாலும்!, முகம்மதியர்களுக்கு சம உரிமை அளிக்கப்படவே இல்லை…

காரணம், காந்தியின் பிடிவாதம்தான். அந்த பிடிவாதத்திற்கு காரணம் பயம். இதனால் பாக்கிஸ்தான் என்னும் தனி நாடு உருவாகி என்னென்ன நடந்தது என்பது உலகம் அறிந்ததே…!

எத்தனை உயிர்கள் இழந்தன, எத்தனை பேர் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் வரலாறு பேசுகிறது. பிடிவாதம் இங்கு விபரீதம்…

தன்நல லாபத்திற்கும், வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர், தான் செய்வது தவறு என்று தெரிந்தும், அதை மாற்றி திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் உறுதியாக அடையாளம் தெரியாமல் அழிவார்கள்…

ஆம் நண்பர்களே…!

🟡 ஒவ்வொரு சாதாரண மனிதரின் குறிக்கோள் மீதான உறுதியான கொள்கைப்பிடிப்புடன் கூடிய, தளராத முயற்சியின் பிடிவாத குணம்தான், அவர்கள் அனைவரையும் இன்னும் இந்த உலகத்தில் சிறந்தவர்களாக நிலை நிறுத்தியுள்ளது…!

🔴 நாம் எந்தவொரு கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறோம் என்பது நமது பிடிவாதத்தை வெற்றியை நோக்கியோ!, தோல்வியை நோக்கியோ!?, அனுப்புகிறது…!!

⚫ சிலநேரம் பிடிவாதம் வெற்றியைத் தருகிறது. சில நேரம் பிடிவாதம் விபரீதமாக முடிகிறது. நமது கொள்கையே நமது பிடிவாதத்தை நல்லதாகவும் கெட்டதாகவும் தீர்மானிக்கிறது…!!!

– உடுமலை சு. தண்டபாணி✒️

News

Read Previous

நீ . . .நீயாக இரு !

Read Next

வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி

Leave a Reply

Your email address will not be published.