பாரதிதாசனின் ”குடும்ப விளக்கு” ஒரு பார்வை

Vinkmag ad
உலக மகளிர் தினம்  மார்ச் 18
உலக “” மகளீர் தினத்தினை “” முன்னிட்டு பாரதிதாசனின் குடும்ப விளக்கு” ஒரு பார்வை

“““““““““““““““““`

              புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். [1891 – 1964]

                                            ””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

புதுவைக் கவியான பாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார்.தமிழ்பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை 

பெற்று விளங்கியவர்.புதுவை அரசியலார் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். புரட்சிக்கனல் 

தெறிக்கும் இவர் பாடல்கள் தமிழர் வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளைக் கண்டிப்பன. 

குடும்ப விளக்குகுறிஞ்சித்திட்டுபாண்டியன் பரிசுஎதிர்பாராத முத்தம் போன்ற இன்னும் பல கவிதை 

நூல்களை படைத்துள்ளார்.

 

     வலியோர் சிலர் எளியோர்தமை

     வதையேபுரி குவதா?

     மகராசர்கள் உலகாளுதல்

     நிலையாமெனும் நினைவா?

     உலகாள் உனது தாய்மிக

     உயிர்வாதை யடைகிறாள்!

     உதவாதினி ஒருதாமதம்

     உடனேவிழி தமிழா!

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

 

    பாரதியின் பெண்ணுரிமைக்குப் பின் தமிழ்த் தென்றல் திரு.வி.க பெண்மையை ஏற்றிப் போற்றினார்.

     இவற்றின் பின்னும் இருட்டு முழுதாய் மறையவில்லைமகளிர்க்குச் சம உரிமைசமவாய்ப்புகள் 

     வழங்கப்படவேண்டும் எனபதற்காக எழுச்சிக் குரல் கொடுத்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.

 

காலத்திற்கு ஏற்ற கருத்து மாற்றமும் இருள் திரையைச் சற்றே விலக்கியது. ஆனால்உரிமைகள் வந்துவிட்டன 

என மூச்சிரைக்க குரல் கொடுக்கும் பெண்கள்தங்கள் தோள் மீது ஒரு சுகமான சுமைகள் மிக நளினமாக ஏற்றப்

பட்டு விட்டதை இப்போது உணர தொடங்க உள்ளார்கள். வேலைக்கு செல்லும் உரிமையைப் பெற்றுள்ள பெண்கள்,

தன் கடமையை ஆற்றுவதில் எத்தனை சுறுசுறுப்புக் காட்டுகிறாள். எத்தனை பரபரப்பு. இதனால் மன இறுக்கம். 

ஆடவரின் பொறுப்பு உணர்ச்சி குறையகுறைய மகளிரின் உழைப்புச் சுமை பன்மடங்கு கூடுகிறதுஅதுமட்டுமல்ல

கணவன் மனைவியிடையே பரிவும்- அன்புப் பரிமாற்றமும் குறைகிறதுகவிஞரின் நூல்களில் தனிச்சிறப்பு வாய்ந்த

குடும்ப விளக்கு‘ ஐந்து பகுதியாக அமைந்த இந்த இல்லற காவியம்ஒருவர் இல் வாழ்க்கைத் தொடங்கி முதுமை

அடையும் வரையுள்ள முக்கிய நிகழ்வுகளை வள்ளுவர் கண்ணோட்டத்தில் விரிவாக விளக்குகிறது.வீட்டின் அன்றாட 

நிகழ்வுகள்-நிகழ்ச்சிகள்விருந்தோமபல்,காதல்-திருமணம்மகப்பேறுமுதியோர் காதல் என்னும் வாழ்க்கையின் கூறுகள்

சிறப்பாக எடுத்து இயமபட்டுள்ளதுஇல்வாழ்க்கை முறையில் கவிஞர் கொண்டுள்ள ஈடுபாடு கனிந்து உள்ளக்கனிவாக

வெளிவந்துள்ளது.

 

தனது 67 வரிக் கவிதையாக 1935-ல் சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம்” என்ற இதழில் தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை” 

என்று தொடங்கும் கவிதைஒரு நாளில் குடும்பத்தலைவி ஒருத்தி மிகப்பொறுப்போடு இல்லறக் கடமைகளை இனிதே

 முடித்து இன்பம் அடைந்தால்சிறிதயர்ந்தாள் என்று முடிகிறது.

 

அந்த நெடிய கவிதையின் விரிவாக்கச் சித்திரமாகத்தான் 1942 ஆம் ஆண்டில் அவர் எழுதிய குடும்ப விளக்கு” – 

ஒருநாள் நிகழ்ச்சி என்கிற புதுமைக் குறுங்காவியமாக அமைந்தது. அன்புப் பிணைப்பினால் இல்லறக்கடமைகளை

வேலைகளை ஓயாது ஒழியாது ஒன்று விடாமல் தானே முகம் சுளிக்காது -அயர்ந்து விடாமல் அவற்றை முடிக்கிறாள்.

 

குடும்ப விளக்கு 1942-ஆம் ஆண்டு வெளிவந்தபோது பெண்கள் வெளியில் சென்று வருவாய் ஈட்டும்

நிலை வந்துவிடவில்லைஇந்த சூழலில்தான் குடும்ப விளக்கு வெளிவந்தது.கணவன் மனைவி இருவரும்

தன்னலம் கருதாதுஇரவில் தன் கணவனைத் தனித்து சந்திக்கின்ற மனைவி பொது நலத்துக்காக நாம் உழைக்க

வேண்டும் என்ற கருத்தைத் தன் கணவனுக்கு உணர்த்துகிறாள்.

 

இதன் தொடர்ச்சியாக 1944ஆம் ஆண்டில் வெளியான குடும்ப விளக்கு இரண்டாம்பகுதி  ,”விருந்தோமபல்

     ”விருந்தினரை வரவேற்பான் தமிழன்;

    அந்த விருந்தினர்க்கு நலம்செய்வான் தமிழன்….” என்கிற சிறு நூல்.

 

 

பெண்களுக்கு கல்வி வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து ஆழமாகவே குரல் கொடுக்கிறது.

   ”கல்வி இல்லாத பெண்கள்

    களர் அந்நிலத்தில்

 புல்விளைந் திடலாம்நல்ல

   புதல்வர்கள் விளைத லில்லை! — என்கிறார்.

 

 

மூன்றாம் பகுதியானதிருமணம்‘ 1952 ஆம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து நான்காம் பகுதிமக்கட்பேறு,

ஐந்தாம் பகுதிகளிலும் முதியோர் காதல்மகளிர் கல்விஒழுக்கம்குடும்பப் பொறுப்புஒழுக்கம்,குடும்பப்

பொறுப்பு,காதல்குழந்தை வளர்ப்பு போன்ற இனிமையாகவும்சுவையாகவும்,புதுமையாகவும் சித்தரித்தார்

பாவேந்தர்கால மாற்றத்திற்கேற்பகால மாற்றத்தை நன்கு புரிந்துக்கொண்டாற் போல்

    ”  குடும்ப விளக்கும் குண்டுக் கல்லும்” 

என்கிற சிறு நாடகத்தை நகைசுவையுடன் புதிய சிந்தனைப் போக்கில் உருவாக்கினார்.

 

குடும்ப விளக்கு” எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுதுமுதற்பகுதியில் ஆண் உயர்வென்பது

 பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லைஎன பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார். சமுதாயக் 

கருத்து மாற்றத்துக்கு  வித்திட்ட பாவேந்தர்மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.

News

Read Previous

உடல் பருமனை குறைக்க ….

Read Next

ஹெச். ஹசன் அஹமத் மாமியார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.