நீங்கள் என்றோர் அதிசயம்!

Vinkmag ad

நீங்கள் என்றோர் அதிசயம்!

உங்கள் அனுமதி இல்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது.

உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும் அது நிரந்தரமாக நின்று போனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள்.

நீங்களாக நின்று விடும் போது தான் வெற்றி வளர்ச்சியும் நின்று போகிறது.

ஒரு சிக்கலில் இருந்து நீங்கள் தப்பிக்க நல்ல வழி அதைத் தீர்ப்பது தான்.

வாழ்க்கை இடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விசித்திர ரகசியம் என்ன தெரியுமா?

எடுப்பவர்கள் இழக்கிறார்கள் கொடுப்பவர்கள் பெறுகிறார்கள்.

வெற்றி ஒரு கைக்குழந்தை. நீங்கள் சிரித்த முகத்துடன் இருந்தால் உங்களிடம் தாவிக் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு அங்கத்திலும் நீங்கள் தேட வேண்டியது வாய்ப்பைத் தானே தவிர உத்திரவாதத்தை அல்ல!

நீங்கள் ஒன்றைத் தொடங்காத வரை சென்றடைவது எப்படி?

நீங்கள் வாழும் வாழ்விலேயே மிகவும் சுவாரசியமான காலகட்டம் நிகழ் காலம் தான்!

சில விஷயங்கள் தவறாகப் போகலாம் நீங்களும் அதோடு போகாதீர்கள்.

நிகழ்ந்திருப்பவற்றிலேயே‌ நிகரற்ற அதிசயம் நீங்கள்தான்!

News

Read Previous

கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையம் திறப்பு விழா

Read Next

தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவதே தீர்வு

Leave a Reply

Your email address will not be published.