தாழ்வு மனப்பான்மை

Vinkmag ad

” தாழ்வு மனப்பான்மை”..
………………………………………

சாதனையாளர்களாக ஆக வேண்டும் என்போரின் மிகப் பெரிய எதிரி இந்தத் தாழ்வு ” மனப்பான்மை ”.

இதை முழுக்க, முழுக்க உருவாக்கி, உணவிட்டு, வளர்த்து அதனுடன் சண்டை போட்டு தோற்று நிற்ப வரும் தாழ்வு மனப்பான்மை உடையவர்தான்.

இதை எவ்வாறு உருவாக்குகிறோம்? நம்மைவிட சிறிது வேறுபாடு உடைய விஷயங்களை உடையவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து உருவாக்குகிறோம்.

தாழ்வு மனப்பான்மை நம்மை என்ன செய்கிறது? உங்களைப் பற்றி உங்களுக்கு தவறாகச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும்.

”உனக்கு எதுக்குடா ரிஸ்க. ” நீ சும்மா இரு.. உன்னால இதல்லாம் ஆகாது”..இவைதான் திருவாளர் தாழ்வு மனப்பான்மையின் போதனேகள்.

இந்தத் தாழ்வு மன்ப்பான்மை என்ற எதிர் மறை எண்ணம் தானாகக் கற்றுக் கொண்டது. உளவியலார் இது குழந்தைப் பருவம் முதல் ஆரம்பிக்கிறது என்று கருதுகிறார்கள்.

வளரும் சூழ்நிலை இதற்கு சாதகமாக அமையும் பட்சத்தில், தாழ்வு மன்ப்பான்மை ஒரு காங்க்ரீட் சுவரைப் போல இறுகி உறுதியடைகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே ஆணுக்கு அதிகமாகப் பெற்றோர் வழங்கும் சுதந்திரம்,

பெண் குழந்தைக்கு விதிக்கும் கட்டுபாடு தாழ்வு மனப்பான்மை தோன்றுவதற்கான விதைகளை ஊன்றி விடும்.

தாழ்வுமனப்பான்மை இல்லாத மனிதர்களை இல்லை என்றே கூடக் கூறலாம்.

ஆனால், இந்த எதிர்மறை மனநிலையை கட்டுப் பாட்டுக்குள் வைத்தும், அதிலிருந்து மீண்டு வருவதும் தான் முக்கியம்.

ஆம்.,நண்பர்களே..,

தாழ்வு மனப்பான்மையில் இருந்து தப்பிக்க என்ன நாம் செய்ய வேண்டும்..?

உங்களுக்குள்ள சிறப்பு விஷயங்களை வெளிக் கொண்டு வாருங்கள்..

உங்கள் மனதுக்கு தாழ்வு எனப்பட்டதை வெளியேற்றுங்கள் ..

இக்குறையை ஒரு தாளில் எழுதி அதை சுக்கு நூறாகக் கிழித்தெறியுங்கள்.

உங்களுக்கு மனதுக்கு அதிக கட்டுப்பாடு விதித்துக் கொள்ளாதீர்கள்..,

உங்களை நீங்கள் நேசியுங்கள், பாராட்டிக் கொள்ளுங்கள்.

நீங்கள் தவறு செய்யும்போது அதனை சுட்டிக்காட்டும் உங்கள் மனசாட்சியின் குரலை அலட்சியம் செய்யாதீர்கள்..

பிறருடன் ஒப்பிடுதலை தவிருங்கள்

News

Read Previous

நாயகம் எங்கள் தாயகம்

Read Next

டென்ஷனை குறைக்க வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *